போக்குவரத்து ஊழியர்கள் தீக்கதிர் சந்தா
மதுரை மாநகரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போக்குவரத்து இடைக்கமிட்டி சார்பில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க கட்டிடத்தில் செவ்வாயன்று சி. குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மா. கணேசன், மூத்த தலைவர் வீ. பிச்சை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வை. ஸ்டாலின், இடைக்கமிட்டி செயலாளர் எஸ். அழகர்சாமி ஆகியோர் கலந்து கொண்டு 57 ஆண்டு சந்தா, 4 ஆறு மாத சந்தா, 5 மாத சந்தா என மொத்தம் 66 சந்தாக்களுக்கான தொகை ரூபாய் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 150ஐ மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் வழங்கினார்கள்.