tamilnadu

img

கறம்பக்குடி பேரூராட்சிக்கு டிராக்டர், டாடா ஏசி வாகனம் சிபிஎம் எம்எல்ஏ எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார்

கறம்பக்குடி பேரூராட்சிக்கு டிராக்டர், டாடா ஏசி வாகனம் சிபிஎம் எம்எல்ஏ எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக் குடி பேரூராட்சிக்காக வாங்கப்பட்ட டிராக்டர், டாடா ஏசி வாகனங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை புதன்கிழமை அன்று தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக் குடி பேரூராட்சியின் தூய்மைப் பணிகளுக்காக கலைஞர் நகர்புற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9,70,000 மதிப்பில் டிராக்டரும், ரூ.7,30,000 மதிப்பில் டாடா ஏசி வாக னமும் வாங்கப்பட்டது. இந்த இரண்டு வாகனங்களையும் பேரூராட்சியின் தூய்மைப் பணிகளுக்காக எம்.சின்ன துரை எம்எல்ஏ கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், கறம்பக்குடி பேரூராட்சித் தலைவர் முருகேசன், திமுக ஒன்றியச் செய லாளர் முத்துகிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன், ஒன்றியச் செயலாளர் துரை.அரிபாஸ்கர், ஒன்றியக்குழு உறுப்பினர் பி.வீரமுத்து மற்றும் பேரூ ராட்சிப் பணியாளர்கள் பங்கேற்றனர்.