tamilnadu

img

சிவகாசியில் தீக்கதிர் வைர விழா 305 சந்தாக்கள் அளிப்பு

சிவகாசி, செப்.12- பொய்களை உற்பத்தி செய்யும்  தொழிற்சாலைகளாக கார்ப்பரேட் ஊடகங்கள் மாறிக் கொண்டிருப்பதாக தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராம லிங்கம் விமர்சித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  விருதுநகர் மாவட்டக்குழு சார்பில் சிவ காசியில் திங்களன்று மாலை தீக்கதிர் வைர விழா-சந்தா வழங்கும் விழா நடை பெற்றது. இவ்விழாவில், மதுக்கூர் இராமலிங்கம் பேசியதாவது: பாஜக ஆட்சியில் காகிதம் மற்றும் மை ஆகியவற்றின் விலைகள் கடுமை யாக உயர்ந்து விட்டது. இந்தச் சூழலில் அச்சுப் பதிப்பை நடத்துவதே  சிரமமான காரியமாகும். கொரோனா பாதிப் பிற்குப் பின் தற்போது தான் பழைய நிலைக்கு மெல்லத் திரும்பி வந்து கொண்டிருக்கிறோம். மிகப் பெரிய புயலுக்கு முன்னால்  மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருப் பது போல நாம் போராடிக் கொண்டி ருக்கிறோம். அந்த ஒளியை எக்காரணம் கொண்டும் அணைய விடமாட்டோம்.  தற்போது பொய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக கார்ப்ப ரேட் ஊடகங்கள் மாறிக் கொண்டிருக் கின்றன. தீக்கதிர் இல்லையென்றால் எதிரிகளின் பொய்ப் பிரச்சாரங்களை நாம் முறியடிக்க முடியாது.  கட்சிப் பத்திரிகை கட்சியின் அமைப்பாளர் என மாமேதை லெனின் கூறினார். அந்த வகையில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் முகம் தான் தீக்கதிர்.

வாச்சாத்தி சம்பவம் மற்றும் அதன்  வழக்குகள், சிதம்பரம் பத்மினி வழக்கு ஆகியவை முதல் தற்போது கள்ளக் குறிச்சி சம்பவம், அதன் விசாரணைக் குழு அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நியாயத்தின் பக்கம் நின்று தொடர்ந்து உண்மையான செய்திகளை வெளியிட்டது தீக்கதிர். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக நடைபெற்ற வைர விழா நிகழ்ச்சிக்கு,   மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.முருகன் தலைமை வகித்தார். சிவகாசி நகர் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் வரவேற்புரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூ னன், மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிர மணியன், மாநிலக் குழு உறுப்பினர் எம். மகாலட்சுமி, மாவட்டச் செயற்குழு உறுப் பினர் பி.என்.தேவா ஆகியோர் முன்னி லை வகித்தனர். முதன்மைப் பொது  மேலாளர் என்.பாண்டி, பொது மேலா ளர் ஜோ.ராஜ்மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  ஒன்றியச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். 

சந்தாக்கள் வழங்கல்

இந்நிகழ்வில், 305 தீக்கதிர் சந்தா தொகை ரூ.4.70 லட்சத்தை விருதுநகர் மாவட்ட தீக்கதிர் பொறுப்பாளர் ஏ.குரு சாமி, தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கத்திடம் வழங்கினார்.