tamilnadu

img

மதவெறி அரசியலுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை!

மதவெறி அரசியலுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை!   கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!  கள்ளக்குறிச்சி, டிச.26 -  “தமிழ்நாட்டில் மீண்டும் திமுக  அரசு அமைவது உறுதி என்றும், மக்களின் ஒற்றுமையைப் பிளவுபடுத்த நினைக்கும் பாஜகவின் வித்தைகள் இங்கு பலிக்காது” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள் ளக்குறிச்சியில் ஆவேசமாக உரையாற்றி னார்.  வெள்ளியன்று கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர், அரசின் சாதனைகளை விளக்கியதோடு எதிர்க்கட்சி களின் விமர்சனங்களுக்குக் கடும் பதிலடி கொடுத்தார்.  எதிர்க்கட்சிகளுக்கு  ‘ஓப்பன் சேலஞ்ச்’  பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு பாழாய்ப் போனதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், “திமுக ஆட்சியின் நான்காண்டு காலச் சாதனைகளில் 5 சதவீதத்தையாவது அதிமுக ஆட்சியில் செய்திருப்பார்களா? இது எனது பகிரங்க  சவால் (Open Challenge), தைரியம் இருந்தால் சொல்லுங்கள்” என முழங்கி னார்.  வாயில் வடை சுடும் அரசு இது வல்ல, நேரடியாக மக்களைச் சந்திக்கும் திறனுள்ள அரசு இதுவென்றும் அவர் குறிப்பிட்டார்.  ஒன்றிய அரசின் புறக்கணிப்பும் பொருளாதார வளர்ச்சியும்  ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக ‘ஸ்பீடு பிரேக்கர்’களை அமைப்பதாகவும், அவர் களின் நிதி உதவி இல்லாமலேயே தமிழ்நாடு 11.19 சதவீத இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ள தாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் (GSDP) தமிழ்நாடு முதலிடத்தில் உள்ள தைச் சுட்டிக்காட்டிய அவர், மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் ஸ்டார்ட்-அப் துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ லீடர் என்பதைத் தரவுகளுடன் நிலைநாட்டினார்.  மதவாத அரசியலுக்கு எச்சரிக்கை  பாஜக ஆளும் மாநிலங்களில் வறுமை, மத வன்முறை மற்றும் கும்பல் படுகொலைகள் நிலவுவதாகச் சாடிய முதலமைச்சர், தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தைப் பிளவுபடுத்த நினைக்கும் பாஜக-வின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்றார். “அவர்கள் எத்தனை அடிமைகளைச் சேர்த்துக்கொண்டு அந்தர் பல்டி  அடித்தாலும் சரி, ஒற்றுமையாக வாழும் தமிழ்நாட்டு மக்களிடம்  மதவெறியைத் தூண்ட முடியாது. இந்த ஸ்டாலின் இருக்கும்  வரை உங்கள் வித்தைகள் இங்கே பலிக்காது” என்று எச்சரித் தார். மேலும், திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானது என்ற  பிம்பத்தை உடைக்கும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் 4,000 கோவில்களுக்குக் குடமுழுக்கு நடத்தியதை அவர் சுட்டிக்காட்டினார்.  வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்த புகார்  2026 தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், வாக்கா ளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்து முதலமைச்சர் கடும் அதிருப்தி தெரிவித்தார். “50 ஆண்டுகளாக ஒரே முக வரியில் இருப்பவர்கள் மற்றும் பிரபல பத்திரிகையாளர்களின்  பெயர்கள் கூட விடுபட்டுள்ளன. இது அவசர கோலத்தில் செய்யப்பட்ட பணி” என்று தேர்தல் ஆணையத்தின் செயல்பா டுகளை விமர்சித்த அவர், ஜனநாயகத்தைக் காக்க உடனே  அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.  சமூக நீதியும் எதிர்காலத் திட்டங்களும்  கல்வராயன் மலைப் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட 3,800-க்கும் மேற்பட்ட வன உரிமைச் சான்றிதழ்கள் மற்றும்  மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில்  வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு ஆகியவை இந்தியா விற்கே முன்மாதிரியான திட்டங்கள் என்று அவர் குறிப் பிட்டார். “தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அடுத்த பாகம்  2026-இல் தொடங்கும்” எனக் குறிப்பிட்ட முதலமைச்சர்,  20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்குச் செயற்கை நுண்ண றிவு (AI) வசதியுடன் கூடிய லேப்டாப் வழங்கும் புரட்சிகர மான திட்டத்தையும் அறிவித்தார். முடிவில், “திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடமாக  2026 தேர்தல் தீர்ப்பு அமையும்; அதுவே விமர்சகர்களுக் கான ரியாலிட்டி செக்” என்று கூறி முதலமைச்சர் தனது உரையை நிறைவு செய்தார்.