மதுரை, ஜூலை 5- மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை சனிக்கிழதைம 3,776 ஆக இருந்தது. ஒரே நாளில் (ஞாயிறு) 315 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனோ பாதித் தோர் எண்ணிக்கை 4,091 ஆக உயர்ந்துள் ளது. மொத்தம் 57 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகரில் 782, திண்டுக்கல்லில் 633, தேனியில் 985, இராமநாதபுரத்தில் 1,292, சிவ கங்கையில் 425 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இராமநாதபுரம் ஆயிரத்தை கடந்து விட்டது. விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.