tamilnadu

img

தீக்கதிர் தென் மண்டலச் செய்திகள்

விபத்தில் வாலிபர் பலி
சின்னாளபட்டி:

வண்ணம்பட்டியை சேர்ந்த ஆரோக்கியலியோனி (43) தனியார் நிறுவனத்தில்பொறியாளராக வேலை பார்த்த வந்தார்.சம்பவத்தன்று இரு சக்கர வாகனத்தில், செம்பட்டிக்கு புறப்பட்டார். எஸ்.பாறைப்பட்டி அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையைக் கடக்க முயன்ற இதே ஊரைச்சேர்ந்த பெரியசாமி மனைவிபேச்சியம்மாள் (60) மீது மோதியது. இதில்இருவரும் பலத்த காயமடைந்தனர். ஆரோக்கியலியோனி, சிகிச்சைக்காக திண்டுக்கல் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். செம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 

பள்ளத்தில் விழுந்தவர் பலி
பழனி:

பழனி அருகே உள்ள பள்ளிகுடத்தான்வலசு பிரிவில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டகுழாய் உடைப்பை சரிசெய்ய பள்ளம்தோண்டப்பட்டது. ஆக. 27-ஆம் தேதிஇரவு அவ்வழியே இருசக்கர வாகனத்தில்வந்தவர்கள் சிலர் பள்ளத்தில் விழுந்தனர். அவர்களில் அமரபூண்டியைச் சேர்ந்த காளிமுத்து (42) காயமடைந்தார். மதுரைமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.ஆயக்குடி காவல்துறையினர் விசாரணைநடத்திவருகின்றனர்.

2 சிறுவர்கள் பலி
சின்னாளபட்டி:

திண்டுக்கல் மாவட்டம் தாமரைபாடிஅருகே உள்ளது வடக்கு கல்லாத்துப் பட்டி. இங்குள்ள ஜிகே ஸ்டீல் நிறுவனம் அருகே வியாழனன்று பிற்பகல் சைக்கிளில் வந்துகொண்டிருந்த சாலையூரைச் சேர்ந்த ரவி மகன் சரத்குமார்(14), கண்ணன் மகன் தமிழ்செல்வன்(14) ஆகிய இரண்டு சிறுவர்கள் மீது வேன் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானார்கள். வடமதுரை காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற் கூராய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பலியான தமிழ்செல்வன் வடமதுரையிலுள்ள அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும், சரத்குமார் முள்ளிப்பாடி அருகே உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகின்றனர்.

வாகனத்திற்கு தீவைப்பு 
சாத்தூர்:

சாத்தூர் கீழக்காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமணி (24). இவர்வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் இவரது இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்தள்ளனர். இதில் வாகனம் முற்றுலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து பிச்சை மணி, சாத்தூர் நகர் காவல்நிலையததில் அளித்த புகாரின் பேரில்காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

உண்டியலில் திருட்டு
சாத்தூர்:

சாத்தூர் அருகே உள்ளது என்.ஜி.ஒகாலனி. இங்கு வெற்றி விநாயகர் கோவில்உள்ளது. இந்தக் கோவிலுக்கு சம்பவத்தன்று காலை வந்த பூசாரி கோவிலில்இருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்சியடைந்தார். உண்டியலில் இருந்த பணம் கொள்ளைபோயிருந்தது. இதுகுறித்து பவுன்ராஜ், சாத்தூர்நகர் காவல் நிலையத்தில் புகார் செய் துள்ளார். 

காவல் ஆய்வாளருக்கு விருது
திருவில்லிபுத்தூர்:

திருவில்லிபுத்தூர் வெஸ்டர்ன் காட்ஸ்சார்பில் விருதுநகர் காவல் நிலையதுணை காவல் நிலைய ஆய்வாளர் கருத்தபாண்டிக்கு விருது வழங்கப்பட்டது. நிகழ்வில் வெஸ்டர்ன் காட்ஸ் பட்டய தலைவர்சங்கர் கணேஷ், பட்டய செயலாளர் சந்தனமாரிமுத்து, துணை ஆளுநர் உமா மகேஸ்வரன், பரலோகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கையெழுத்து இயக்கம்
திருவில்லிபுத்தூர்:

கொரோனா கால சிறப்பு ஊதியம்வழங்கவேண்டுமென்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் (சிஐடியு) திருவில்லிபுத்தூர் நகராட்சியில் கையெழுத்து இயக்கம் நடத்தினர். பின்னர் பொறுப்பு ஆணையாளர் ரமேஷிடம் மனுஅளிக்கப்பட்டது. கையெழுத்து இயக்கத்தில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் திருமலை, ஜெயக்குமார், சங்க நிர்வாகி ராமசுப்பு, முனியாண்டி முனியப்பன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்
நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்துநிலையம் அருகே 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஜி.வி.கே - இ.எம்.ஆர்.ஐ நிர்வாகத்தை கண்டித்துஆர்பாட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் ராமநாதன், நரேஷ்குமார், அழகர்சாமி, சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கரூரில் நடைபெற்ற ஊழலை வெளிப்படுத்திய தொழிலாளர் களை பணிநீக்கம் மற்றும் பணி மாறுதல் செய்ததைக் கண்டித்தும், சிறப்பு பணிக்காக அரசு வழங் கிய ஊக்கத் தொகை ரூ.150 உடனடியாக வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் முழக்கமிட்டனர்.