கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்
புதுதில்லி:
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கியதாக பாஜக மீது,தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். இதற் காக, அவர் மீது பாஜக அவதூறு வழக்கு போட்டது. இந்த வழக்கில், கெஜ்ரிவால் ஜாமீன் கேட்டிருந்தார். செவ்வாயன்று நடைபெற்ற விசாரணையின்போது, முதல்வர் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் நேரிலும் ஆஜராகி இருந்தார். இந்நிலையில், வழக்கை விசாரித்த தில்லி நீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
மகாராஷ்டிரா பாஜக தலைவர் ராஜினாமா
மும்பை:
மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவராக இருந்தவர் ராவ்சாஹிப் பாட்டீல் தான்வே. இவர்தனது மாநிலத் தலைவர்பதவியை ராஜினாமா செய்வதாக செவ்வாயன்று திடீரென அறிவித்துள்ளார். இவர் கடந்த015-ஆம் ஆண்டு முதல்பாஜக மாநிலத் தலைவர்பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உ.பி.யிலும் ஆள்பிடி வேலை
புதுதில்லி:
முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர், நீண்டகாலமாக சமாஜ்வாதி கட்சி எம்.பி.யாக இருந்து வருகிறார்.தற்போதும் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், திங்களன்று திடீரென தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நீரஜ் சேகர், செவ்வாயன்று தில்லியில் பாஜக செயல் தலைவர்நட்டாவைச் சந்தித்து,பாஜக-வில் இணைந்துள்ளார். இதன்மூலம் உத்தரப்பிரதேசத்திலும் பாஜகதனது ஆள்பிடி வேலையை அரங்கேற்றியுள்ளது.