tamilnadu

மாதர் சங்கத்தின் விடாப்பிடியான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி

மாதர் சங்கத்தின் விடாப்பிடியான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி

தீர்ப்பை வரவேற்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ. ராதிகா பேசுகை யில், “இந்த தீர்ப்பு தமிழ்நாட்டில் உள்ள  லட்சக்கணக்கான பெண்களுக்கு நம்பிக்கை யளிக்கும் தீர்ப்பாக அமைந்துள்ளது. வன்முறை யால் பாதிக்கப்பட்டும் வெளியே வர முடியாமல் இருக்கும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இது நம்பிக்கையளிக்கும். அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப் பட்டிருப்பது வரவேற்கத்தக்கது” என்றார். “அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடுத் தொகை போதுமானதாக இல்லை. அந்தப் பெண்களுக்கு அரசு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மாதர் சங்கம் நடத்திய நீண்ட - நெடிய போராட்டங்களையும் அவர் குறிப்பிட்டார். “இன்று 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருப்பது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மாதர் சங்கம் போராட்டத்தை கையில் எடுத்ததாலேயே இந்த  வழக்கு வேகம் பெற்றது. கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்ய காலதாமதம் செய்தனர். குற்றவாளிகளை மூடி மறைக்க முயன்றனர். அப்போது, மாதர் சங்கம் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டனை பெற வேண்டும் என்பதற்காக போராடிய மாதர் சங்கத்தினர் மீதே நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இன்று வரை அந்த வழக்குகளுக்காக நாங்கள் நீதிமன்றத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார். “இந்த தீர்ப்பு, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடும் அனைத்து தரப்பினருக்கும் ஒரு நம்பிக்கையை அளிப்பதாக அமைந்துள்ளது. நீதிக்கான மாதர் சங்கத்தின் குரல் எப்போதும் ஒங்கி ஒலிக்கும் என்றார்.  முன்னதாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தீர்ப்பை வரவேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ. ராதிகா தலைமை யில், மாவட்டத் தலைவர் ஜோதிமணி, செயலாளர் வழக்கறிஞர் சுதா, பொருளாளர் உஷா, மாநிலக்குழு உறுப்பினர் எஸ். ராஜலட்சுமி, மாவட்ட முன்னாள் தலைவர் அமுதா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.