tamilnadu

செருப்பு தொழிற்சாலையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்! பெத்தாங்குப்பம், மலையடிக்குப்பம் மக்களின் வாழ்விடத்தை பாதுகாக்க கோரி மனு

செருப்பு தொழிற்சாலையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்! பெத்தாங்குப்பம், மலையடிக்குப்பம் மக்களின் வாழ்விடத்தை பாதுகாக்க கோரி மனு

சென்னை, ஜன.14 - கடலூர் மாவட்டம் பெத்தாங்குப்பம், மலையடிகுப்பம், கீரப்பாளையம் கிராமப் பகுதிகளில் தோல் அற்ற செருப்பு தொழிற்சாலையை பொருத்த மான மாற்று இடத்தில் அமைத்து பெத்தாங் குப்பம், மலையடிக்குப்பம் மக்களின் வாழ்விடத்தைப் பாதுகாத்திட வலியுறுத்தி  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன் ஜன.13 (செவ்வாய்) அன்று தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளரை நேரில் சந்தித்து மனு அளித்து பேசினார். அந்த மனுவில், “கடலூர் மாவட்டம்  பெத்தாங்குப்பம், மலையடி குப்பம், கீரப்பாளையம் கிராமப் பகுதிகளில் தோல் அற்ற செருப்பு தொழிற்சாலை அமைத்திட மாநில அரசு முயற்சித்து வருவதாக அறிவித்துள்ளது. அப்பகுதி யில் பல தலைமுறைகளாக அனுபவத் தில் இருக்கிற விவசாயிகளின் விளை  நிலத்தில் தொழிற்சாலை அமைத்திட  தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படு கின்றன. இதனால் நூற்றுக்கணக்கான மக்க ளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஏற்கனவே அம்மக்கள் பல தலைமுறை களாக வளர்த்த 3,400 முந்திரி மரங்கள் அதிகாரிகளால் அழிக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லாத நிலையில், அந்த மக்களை நில வெளியேற்றம் செய்யாமல், பொருத்த மான மாற்று இடத்தில் தோல் அற்ற செருப்பு தொழிற்சாலையை அமைத்து பெத்தாங்குப்பம், மலையடிக்குப்பம் மக்களின் வாழ்விடத்தைப் பாதுகாத்திட வேண்டுமென தமிழக அரசை தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்  கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.