tamilnadu

img

கவியரசரை கவர்ந்த திரைக்காவியம்! - -முகநூலில் கவியரசர் வைரமுத்து

கவியரசரை கவர்ந்த திரைக்காவியம்!

கிடைக்கும் வேலை நல்ல வேலையா, மோசமான வேலையா, சமூகத்திற்கு நன்மை அளிக்குமா அல்லது கெடுதல் அளிக்குமா என்று தீர்மானிக்கும் உரிமை , வேலையில்லாமல் அவதிப்படும் யாருக்கும் கிடைப்பதில்லை. மனைவி, குழந்தையுடன் வேலையில்லாமல், குடியிருக்கும் வீட்டிற்கு மூன்று மாதமாக வாடகைகூட கொடுக்க முடியாமல் அலைந்து கொண்டிருக்கும் ஃபர்ஹாத் கிடைக்கும் வேலை எதுவானாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார்.  டர்ட்டி ஜாப் என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான கோஸ்ரோ மசூமி இயக்கிய ஈரானிய குற்ற நாடகத் திரைப்படமாகும், இது  வேலையின்மை சட்ட மாணவர் ஒருவர் மதுவை விற்று அமெரிக்காவிற்கு குடிபெயர கிரீன் கார்டை வென்றதைப் பற்றியது. அவ ரது குடும்பத்தினர் ஈரானுக்குத் திரும்ப முடிவு  செய்த பிறகு, அவர் ஒரு கடினமான சூழ்நிலை யில் விடப்பட்ட பிறகு அவரது உணர்ச்சிக் குற்றச்சாட்டு மற்றும் போராட்டத்தைப் பற்றி படம் பின்தொடர்கிறது. இந்த திரைப்படம் ஈரானில் படமாக்கப்பட்டது மற்றும் பிரைம் வீடியோ, டூபி இதை யூடியூப் போன்ற தளங்க ளில் காணலாம். இந்த படம் ஃபர்ஹாத்தை மையமாகக் கொண்டுள்ளது. சட்டம் பயின்ற மாண வரான ஃபர்ஹாத்திற்கு வேறு வேலை கிடைக்  காததால் கள்ளத்தனமாக மது விற்கும் வேலை யை மேற்கொள்கிறார். துளி கூட மது  வாசனை பிடிக்காத அவர் வேறு வழியில்லா மல் அந்த தொழிலை செய்ய வேண்டிய கட்டா யம் ஏற்படுகிறது. தனது மாமனார், மனைவி எல்ஹாம் உட்பட யாருக்கும் தெரியாமல் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் தொழிலில் இருப்பதாக அவர்களை ஏமாற்றிவிட்டு, மது விற்பனை செய்கிறார். அவர் அமெரிக்க கிரீன் கார்டு பெற்று தனது மனைவி எல்ஹாம் மற்றும் மகன் நவிட்டுடன் தனது பன்முகத்தன்மை விசாவைப் பெறும் முயற்சியாக துருக்கிக்குச் செல்கிறார்.அவர் கடைசியாக ஒரு திருமண விருந்துக்கு சென்று சேர்ந்த மதுவின் விஷத்தன்மை காரணமாக பலர் இறக்கின்றனர். பலருக்கு கண் பார்வை பறிபோகின்றது. இந்த நிகழ்வு  எதுவும் தெரியாமலேயே அவர் விசாரிக்கும் முயற்சியில் துருக்கிக்கு குடும்பத்தோடு சென்று விடுகிறார். துருக்கியில் இருக்கும்  போது, தான் கொண்டு சென்ற மதுபானங் களின் விஷத்தால்தான் பலருக்கு மரணம் மற்றும் குருட்டுத்தன்மை ஏற்பட்டது என்பது தெரியவருகிறது. இதனால் ஃபர்ஹாத் குற்ற உணர்வு மற்றும் குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறார். மதுவிலக்கு போலீசார் கிடுக்கிப்பிடி போட்டு கள்ள மது தயாரித்தவரை கைது  செய்கின்றனர். அவர் தப்பித்துக் கொள்வ தற்காக ஃபர்ஹாத் மீது கைகாட்டி, திசை திருப்பி விடுகிறார். மிகவும் நேர்மையான ஃபர்ஹாத்தின் மனைவியால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மீண்டும் ஈரானுக்கு திரும்ப அவர் வற்புறுத்துகிறார்.  விஷம் பற்றிய செய்தி ஃபர்ஹாத்தை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஏனெனில் எதிர்பாராத சம்பவத்தால் அமெரிக்காவிற்கு குடிபெயரும் அவரது கனவுகள் அச்சுறுத்த லுக்கு உள்ளாகின்றன. நேர்மையான மனிதரான ஃபர்ஹாத்திற்கு குற்ற உணர்ச்சி ஒரு புறம், வெளிநாடு செல்லும்  கனவு சிதைவுறுவதை ஏற்றுக்கொள்ள முடி யாத நிலை மறுபுறம், தன் மனைவி, மாமனாரி டம் மறைத்து அதனால் ஏற்பட்ட சங்கடமான நிலை, பையன் மீதான பாசம் எல்லாம் சேர்ந்து  அவரை ஆட்டிப் படைக்கிறது. பொருளாதார நெருக்கடி, வேலை இல்லா திண்டாட்டம், மது வினால் ஏற்படும் சமூக பிரச்சனை அனைத்தை யும் பிரதிபலிக்கும் மிக அற்புதமான சமூக உணர்வுகள் கொண்ட திரைப்படம் இது. ஃபர்ஹாத்தாக நடித்திருக்கும் பெட்ராம்ஷெரிஃபி மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எல்ஹா மாக நடித்த எல்ஹாம் நமு தனது கணவ னோடு ஏற்பட்ட முரண்பாடுகள், மது விற்பனை யில் கணவன் ஈடுபட்டதை அறிந்து படும்  ஏமாற்றங்கள் அனைத்தையும் சிறப்பாகக் காட்டியிருக்கிறார். நவீட்டாக வரும் குழந்தை  நட்சத்திரமாக சாம்வாலிபூர் நடித்துள்ளார்.