tamilnadu

img

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தெற்கில் இருந்தே எழுதுவோம்!

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தெற்கில் இருந்தே எழுதுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கீழடியில் ரூ.24.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (பிப். 13) திறந்து வைத்தார். தேர்வுகள் முடிந்ததும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்திற்கு  மாணவர்களைப் பெற்றோர் அழைத்து வாருங்கள் என்றும், இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தெற்கில் இருந்தே எழுதுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் திறப்பு; தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களைப் பெற்றோர் அழைத்து வாருங்கள்.
கீழடியின் பானை ஓடுகளில் நாம் கண்டெடுத்த தமிழி எழுத்துகள், கடல் கடந்து, எகிப்து நாட்டின் பிரமிடுகளிலும் இடம்பெற்றுள்ள மகிழ்ச்சியை மேலும் பெருக்கிடும் வகையில், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்திருக்கிறேன்.
இராமநாதபுரம் - நாவாய், ஈரோடு - நொய்யல் அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.
தமிழர் தொன்மையின் தடங்களைத் தேடித் தேடிக் கண்டறிந்து உலகுக்கு அறிவிப்போம்! இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தெற்கில் இருந்தே எழுதுவோம்!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.