tamilnadu

img

ஓவியர்களைக் கௌரவித்த வரவேற்புக் குழுத் தலைவர்கள்

ஓவியர்களைக் கௌரவித்த வரவேற்புக் குழுத் தலைவர்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 முதல்  6 ஆம் தேதி வரை நடைபெற உள்  ளது. இந்த மாநாட்டிற்காக வர வேற்புக்குழு அமைக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டுச் செய்தியை மக்களுக்கு கொண்டுசெல்லும் வகையில் சுவர் விளம்பரங்கள் மதுரை மாவட்டம் முழுவதும் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் 300-க்கும் மேற்பட்ட இடங்களிலும் புறநகர் பகுதியில் 200க்கும்  மேற்பட்ட இடங்களிலும் சுவர்  விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதில் மதுரை, விருதுநகர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ள ஓவியர்கள் சுவர் விளம்பரங்களை செய்துள்ளனர்.  நாகர்கோவிலில் இருந்து சுரேஷ் தலைமையில் வந்த ஓவியர்கள் மதுரை மாநகர் - புறநகர்  பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட  சுவர்களில் பல வண்ணங்களில் விளம்பரங்களை வரைந்துள்ளனர்.  மாவீரன் பகத்சிங், மாமேதை  காரல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங் கெல்ஸ், லெனின், ஸ்டாலின், சே  குவேரா போன்ற கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்று நாயகர்களை நினைவுபடுத்தும் விதமாக அவர்களுடைய உருவ படங்களை ஓவியமாக தீட்டி மாநாட்டை விளம்பரப் படுத்தியுள்ளனர்.  இதுகுறித்து சுவர் விளம்ப ரக்குழு ஒருங்கிணைப்பாளர் கே.  சுரேஷ் கூறுகையில், கடந்த 20 நாட்க ளுக்கும் மேலாக மதுரையில் மாநாட்டு விளம்பரப் பணிகளை மேற்  கொண்டு வருகிறோம். இப்பணி களில் மிகவும் நுட்பமானது கம்யூ னிஸ்ட் இயக்க தலைவர்களின் சித் திரங்களை வரைந்து மாநாட்டுச் செய்திகளை வெளிப்படுத்தவேண்டும் என்பது ஆகும். மதுரை  மாநகர் - புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பல வண்ணங்களில் விளம்பரங்களை செய்துள்ளோம்.

இதில்  மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின்,  ஸ்டாலின், பகத்சிங் போன்ற தலை வர்களின் படங்களை வரைந்துள் ளோம். சுவர் விளம்பரப்பணிகளை அதிகாலையிலேயே துவங்கி விடுவோம். இரவு வரை பணி செய்வோம். அகில இந்திய மாநாடு என்பதால் ஆங்கிலத்திலும் விளம்பரம்  செய்துள்ளோம். என்னுடன் சேர்ந்து  ஓவியர் சஞ்சு, அனந்த பத்மநபன் ஆகி யோரும் சிறப்பாக செய்துள்ளனர்.  விளம்பரக்குழு ஒருங்கிணைப் பாளர் வை. ஸ்டாலின் கூறுகையில், வரலாற்றுப் பாரம்பரியமிக்க மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில  இந்திய மாநாட்டுச் செய்தியை மக்களுக்கு கொண்டுசெல்லும் வகையில் மாவட்டம் முழுவதும் 500-க்கும்  மேற்பட்ட சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதில் மதுரை தோழர்கள் வெண்புறா, பாண்டிய ராஜன், நாகர்கோவில் தோழர்கள் சந்திரன் மற்றும் ஓவியர் கண்ணன் ஆகியோரின் பங்களிப்பும் உள்ளது. சிபிஎம் அகில இந்திய மாநாடு  மக்களின் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெறும். இந்த விளம்பரப் பணியில் ஈடுபட்ட ஓவியர்களை பாராட்டும் விதமாக கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன், மாநகர்  மாவட்டச் செயலாளர் மா. கணேசன் ஆகியோர் ஓவியர்களை நேரில்  சந்தித்து சால்வை அணிவித்து கௌரவித்துள்ளனர் என்று கூறினார்.