tamilnadu

img

மக்களின் கண்ணீர், கடலாக மாறியும் துயரம் தொடர்கிறது : எஸ்.ஏ.பெருமாள் உரை

விழுப்புரம், ஜன. 3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டில் செங் கொடியேற்றி உரையாற்றிய மாநிலக் குழு உறுப்பினரும், மூத்த தலைவரு மான எஸ்.ஏ. பெருமாள், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு பயணத்தை யும், எதிர்கால இலக்குகளையும் உணர்ச்சிகரமாக விவரித்தார். “நூறு ஆண்டுகளாக மக்க ளுக்காக போராடி வரும் கம்யூனிஸ்டு கள், ஜனநாயகத்தையும் பொருளா தார உரிமைகளையும் வென்றெடுத்து ள்ளனர். எனினும், விவசாயிகள், பெண் களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை உருவாக்க முடியவில்லை என்ற விமர்சனங்கள் உள்ளன” என்று தன் உரையைத் தொடங்கினார் எஸ்.ஏ. பெருமாள். மக்களின் துயரங்களை இலக்கி யப் பார்வையோடு விவரித்த அவர், “பாரதியின் ‘தனி ஒருவனுக்கு உண வில்லை எனில் ஜகத்தினை அழித்திடு வோம்’ என்ற வரிகளில் வெளிப்படும் கோபம், இன்றும் பொருத்தமானதே. கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்ற கேள்விக்கு, மனிதகுலத்தின் கண்ணீரே கடலாக மாறியது என்ற  கவிஞர்களின் பதில், மக்கள்படும் துய ரத்தின் ஆழத்தை உணர்த்துகிறது” என்றார். “இன்றும் மக்களின் துயரங்கள் தொடர்கின்றன. அவற்றுக்கு எதிரான போராட்டங்களையே செங்கொடி இயக்கம் தொடர்ந்து முன்னெடுக் கிறது. அதனால்தான் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தாத மக்களும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன் கொடை வழங்குகின்றனர். ஆனால் வாக்குப்பெட்டியில் மட்டும் நம்மை பின்னுக்குத் தள்ளுகின்றனர். இந்த முரண்பாட்டை களைய அடுத்த தலைமுறை சிந்திக்க வேண்டும்” என்று வேதனையுடன் குறிப்பிட்டார். கட்சியின் வளர்ச்சிக்கான திட்டத்தை முன்வைத்த எஸ்.ஏ. பெரு மாள், “ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் ஆண்டுதோறும் ஒருவரை கட்சியில் இணைக்க உறுதியேற்க வேண்டும். அப்போதுதான் கட்சி உறுப்பினர் களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் ஒரு லட்சம், இரண்டு லட்சம் என உயரும். இந்த இலக்கை நோக்கி முன்னேறு வோம்” என அறைகூவல் விடுத்தார். மாநாட்டின் தொடக்க நிகழ்வாக நடைபெற்ற செங்கொடியேற்று விழா வில் எஸ்.ஏ. பெருமாள் ஆற்றிய இந்த உரை, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கடந்த கால சாதனைகளையும், எதிர் கால சவால்களையும் சிறப்பாக எடுத்துரைத்தது.