tamilnadu

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு மக்கள் தலையில் இடியை இறக்கியுள்ளது மோடி அரசு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு மக்கள் தலையில் இடியை இறக்கியுள்ளது மோடி அரசு

புதுதில்லி / சென்னை, மார்ச் 8 - ஒன்றிய பாஜக அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை யை அதிரடியாக உயர்த்தியிருப்ப தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தனது வன்மையான கண்ட னத்தைத் தெரிவித்துள்ளது.  இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளன. ஏழை மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டு உபயோக மற்றும் வணிக ரீதியிலான எரி வாயு சிலிண்டர்களின் விலை  கடுமையாக உயர்த்தப்பட்டி ருப்பதற்குத் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.  குறிப்பாக, உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஏழைப் பயனாளிகளைக் கூட விட்டு வைக்காமல், சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தப்பட்டிருப்பது கொடூரமானது எனச் சுட்டிக்காட்டி யுள்ளது. மேலும், வணிக சிலிண்டர் விலையை ரூ. 114.50 உயர்த்தி யிருப்பது அதன் சுமையை இறுதியில் நுகர்வோர் மீதே சுமத்தும் என்றும், ஏற்கனவே விலை வாசி உயர்வு மற்றும் வருமானக் குறைவால் தத்தளிக்கும் நடுத்தர வர்க்கத்தினரையும் உழைக்கும் மக்களையும் இது மேலும் பாதிக்கும் என்றும் அர சியல் தலைமைக்குழு எச்சரித்துள் ளது. எரிவாயு மீதான வரிகளி லிருந்து வருவாயை விட்டுக் கொடுக்க மறுக்கும் ஒன்றிய அரசின் செயல், அதன் மக்கள் விரோதத் தன்மையையே அம்பலப்படுத்து கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் சரணாகதி மேற்கு ஆசியப் போரைச் சாக்குப்போக்காகக் கூறி இந்த விலை உயர்வை நியாயப்படுத்த முனைவது, அரசாங்கத்தின் சொந்தக் குற்றத்தை மறைக்கும் பாசாங்குத்தனமான முயற்சி யாகும் என அரசியல் தலைமைக் குழு விமர்சித்துள்ளது.  இது டிரம்ப் நிர்வாகத்தின் போர்வெறிக் கொள்கைகளுக்கு முன் மோடி அரசு சரணடைவதை யும், அமெரிக்காவின் உலக ளாவிய மேலாதிக்க நலன் களுக்குச் சேவை செய்யத் தயாராக இருப்பதையுமே பிரதி பலிக்கிறது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. செங்குத்தான உயர்வு: மாநில செயற்குழு கண்டனம் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் மாநிலச் செயலாளர் பெ.  சண்முகம் விடுத்துள்ள அறிக்கை யில், ஜி.எஸ்.டி உள்ளிட்ட வரிக் கொடுமைகளால் துயருறும் ஏழை, எளிய மக்களின் தலையில் தற்போது ரூ. 60 விலையை உயர்த்தி மோடி அரசு இடியை இறக்கியுள்ளது எனச் சாடி யுள்ளார்.  சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலைகளைக் குறைக்காத பாஜக அரசு, தற்போது விலையை உயர்த்தியுள்ளது அநியாயமானது என்றும், இது சங்கிலித் தொடர் போல உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும் அபாயம் உள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் இந்திய இறையாண்மை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்க வெறியைக் கண்டித்து,  வளர்ந்து வரும் நாடுகளை ஒருங்கி ணைத்துச் செயல்படுவதன் மூலம் போரை நிறுத்தி எரிபொருள் தட்டுப்பாட்டைத் தடுக்க முடியும். ஆனால், அமெரிக்காவை இதுவரையிலும் கண்டிக்கக் கூட  முன்வராத பிரதமர் மோடியின் செயல், இந்தியாவின் இறை யாண்மைக்கும் வெளியுறவுக் கொள்கைக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் ஒரு மாதத்திற்கு மட்டும் பெட்ரோலியப் பொருட்கள் வாங்க டிரம்ப் ‘அனுமதித்ததைச்’ சாதனையாகக் கொண்டாடும் சங்பரிவாரங்களின் போக்கு, அவர் களுக்கு அமெரிக்கா மீதுள்ள விசு வாசத்தையே காட்டுகிறது. கார்ப்பரேட் ஆதரவுப் பாதையைத் தீவிரப்படுத்தும் மோடி அரசின் இந்தச் செயலைக் கண்டித்து, அனைத்துப் பகுதி மக்களும் மிகக்  கடுமையான எதிர்ப்பைத் தெரி விக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.