அர்லேகர் 12ஆம் தேதி பதவியேற்கிறார்
சென்னை, மார்ச் 9 - தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டதுடன், கேரள மாநில ஆளுநர் ஆர்.வி. அர்லேகருக்கு தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், அர்லேகர் மார்ச் 12 நண்பகல் 12 மணிக்கு சென்னை ராஜ்பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநராக பதவியேற் கிறார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.