tamilnadu

img

கவுரவ விரிவுரையாளர்களிடம் பேச்சு நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!

சென்னை, பிப். 3 - போராடும் கவுரவ விரிவுரை யாளர்களிடம் பேச்சு நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண் முகம் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:

உரிய ஊதியம், சட்டப்படியான உரிமைகள் மறுப்பு

தமிழகம் முழுவதும் 171 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 7,300 கவுரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகின்றனர். தற்போது இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 25,000 வழங்கப்பட்டு வருகிறது. மே மாதம் ஊதியம் வழங்கப்படுவதில்லை. மேலும் இவர்களுக்கு மருத்துவ விடுப்பு,  பேறுகால விடுப்பு போன்றவை மறுக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், அவர்கள்- பல்கலைக் கழக மானியக்குழு பரிந்துரைகள் மற்றும் சென்னை உயர் நீதி மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மாத ஊதியம் ரூ. 50,000 வழங்க வேண்டும் எனவும், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டு மெனவும் கோரிக்கை வைத்து ஒருவார காலமாக போராடி வருகின்றனர்.

துறைசார் ஒழுங்கு நடவடிக்கை சரியானதல்ல!

நியாயமான கோரிக்கைகளுக்காக, ஜன நாயக ரீதியாக போராட்டம் நடத்தி வரும் கவு ரவ விரிவுரையாளர்களை மாநில அரசு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர் களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்றித் தருவதற்கு உரிய தீர்வு காண வேண்டுமெனவும், போராடும் பேராசிரியர் கள் மீது துறைசார் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது சரியான அணுகு முறையாகாது, அதனை கைவிட வேண்டு மெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.