குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்ததால் இந்திய தூதரகம் எனக்கு விசா மறுத்துள்ளது என சியாட்டில் நகர முன்னாள் மாநகராட்சி கவுன்சில் உறுப்பினரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவ ருமான ஷாமா சாவந்த் குற்றம் சாட்டியுள்ளார். ஷாமா சாவந்த் தனது கணவருடன் அமெ ரிக்காவின் சியாட்டில் நகரில் வசித்து வருகின்றார். இவர் சியாட்டில் மாநகராட்சி கவுன்சில் உறுப்பின ராக இருந்தவர். பெங்களூரில் உடல் நிலை சரி யில்லாமல் உள்ள தனது தாயை பார்ப்ப தற்காக ஷாமாவும், அவரது கணவரும் இந்தி யாவுக்கு வருவதற்காக விசா வுக்கு விண்ணப்பித்துள்ள னர். இதில் ஷாமாவின் கண வருக்கு மட்டும் விசா கொடுக் கப்பட்டது. ஷாமாவின் விசா நிராகரிக்கப்பட்டது.
விசா நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து சியாட்டி லில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்திற்கு சென்று அங்கு உள்ள அதிகாரிகளிடம் விசா மறுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ஷாமா கேட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள் உடனடியாக பதில் சொல்லாத நிலையில், தொடர்ந்து அலுவலக வளாகத்தை விட்டு வெளியே செல்ல மறுத்து அங்கே நின்றுள்ளார். இது குறித்து ஷாமா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: என்னுடைய விசா மறுக்கப்பட்ட தற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் நான் கேட்ட போது என்னுடைய பெயர் நிராகரிப்பு பட்டிய லில் இருப்பதாக கூறினார்கள். பிறகு காவல் துறையினரை அழைப்போம் என மிரட்டினார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
சியாட்டில் மாநகர சபை தீர்மானங்கள்
மேலும் விசா ஏன் மறுக்கப்பட்டுள்ளது என்ப தற்கான காரணம் எனக்கு தெரிகிறது. மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டி த்து சியாட்டில் மாநகர சபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. சாதி பாகுபாட்டிற்கு எதிராகவும் தீர்மானம் நிறை வேற்றி அம்மாநகர சபையில் நாங்கள் வரலாறு படைத்துள்ளோம். இதனால் இந்திய தூதரக அதி காரிகள் எனது விசாவை நிராகரித்திருப்பார்கள் என தெரிவித்துள்ளார். ஒரு முறையல்ல, மூன்று முறை எனது விசா வை இவர்கள் நிராகரித்துள்ளார்கள் என குற்றம் சாட்டிய அவர் பாஜக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.