tamilnadu

img

இந்திய பாட்டாளி வர்க்கத்தின் நம்பிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே!

விழுப்புரம் மாவட்ட தோழர்கள் மத்தியில் உ. வாசுகி பேச்சு

விழுப்புரம், ஜன. 1 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு, விழுப்புரத்தில் ஜனவரி 3 துவங்கி 5 வரை நடைபெறுவதையொட்டி, மாநாட்டிற்கான இறுதிக் கட்டப் பணிகள் முழு வீச்சில் நடை பெற்று வருகின்றன.  இப்பணிகளை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி, கடந்த மூன்று நாட்களாக விழுப்புரத்திலேயே தங்கி கவனித்து வரு கிறார். இதில், பொது மாநாடு மற்றும் பிரதிநிதி கள் மாநாடு நடைபெறும் ஆனந்தா திருமண மண்டபத்தில் நடந்து வரும் ஆயத்த பணி களை புதனன்று நேரில் சென்று பார்வை யிட்டார். தொடர்ந்து, பொதுக்கூட்டம் நடைபெற வுள்ள- புதிய பேருந்து நிலையம் அருகி லிருக்கும் நகராட்சித் திடலையும் பார்வை யிட்டார். மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், மாநாட்டு வரவேற்புக் குழு தலைவர் ஆர். ராமமூர்த்தி, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.டி. முருகன், விதொச நிர்வாகி எஸ். அபிமன்னன் ஆகியோரும் உடனிருந்தனர். இந்நிலையில், முன்னேற்பாட்டுப் பணிகளை குறிப்பிட்டு, கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், மாவட்டத் தலைவர்கள் மத்தி யிலும் பேசுகையில் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி கூறியதாவது:

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டுப் பணி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுப் பணி என்பது சாதாரணமானது அல்ல. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். காரணம், விழுப்புரம் மாவட்டத்தில் முதல் முறையாக நடக்கும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் ஸ்தாபன மாநாடு. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த மாநில மாநாட்டை நடத்தும் மிகப்பெரிய பொறுப்பை கட்சியின் விழுப் புரம் மாவட்டக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது. யாரை நம்பி என்றால், தோழர்களையும் அவர் களையும் வழிநடத்தும் தலைவர்களை நம்பித்தான் இந்த கடமையை ஏற்றுக் கொண்டுள்ளது. உழைக்கும் வர்க்கத்தை அணிதிரட்டும் சிபிஎம் இன்றைய அரசியல் சூழ்நிலையில், மிக மோசமான நவீன தாராளமயக் கொள்கைகள், உழைப்பாளி மக்களின் வாழ்க்கையில் ஏராளமான சுமைகளை ஏற்றிக்கொண்டு வரு கிறது. மறுபக்கம், உழைப்பாளி மக்கள் ஒன்றிணைந்து போராடக்கூடாது என்பதற்காக வழக்கமான அடையாள அரசியலை முன்னுக்கு கொண்டு வருகிறது. குறிப்பாக சாதி  ரீதியான அடையாள அரசியல், மதவெறி அடை யாள அரசியல் என்று மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் அரசியலில் வேகம் காட்டு கிறது. இத்தகைய அடையாள அரசியலை எதிர்த்து சாதி, மதங்களை கடந்து உழைப்பாளி மக்களை ஒன்றிணைத்து, அவர்களின் வாழ்வா தாரம், எதிர்காலம் பாதுகாக்க வேண்டும் என்ப தற்காக நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டங் களை- மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் திரட்டி நடத்தி வரும் மாபெரும் இயக்கம் செங்கொடி இயக்கமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகும்.

போராட்டக்களத்தில்  முன்னிற்கும் அணிகள்

அதேபோன்று, சமூக ஒடுக்குமுறையை எதிர்த்து பெண்கள் நடத்தும் போராட்டம், சாதிய - தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதி ரான போராட்டம், இளைஞர்களின் நலனுக் காகவும் நாட்டின் நலனுக்காகவும் நடத்தப் படும் போராட்டம் என்று நாடு முழுமைக்கும் நடந்துள்ள போராட்டங்களில் 90 விழுக்காடு போராட்டங்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதனைச் சார்ந்த வர்க்க- வெகு மக்கள் அமைப்புகளும் தான் நடத்தியுள்ளன.

அடுத்த 3 ஆண்டுக்கான  பாதையை திட்டமிடுவோம்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடந்த மூன்று ஆண்டுகளில் நமது கட்சி நடத்தி இருக்கக்கூடிய போராட்டங்கள் எத்தகையவை, அவற்றை இன்னும் எந்தள விற்கு வலுப்படுத்த வேண்டியது உள்ளது, பிரச்சனைகளின்பால் மக்களை எந்த அளவிற்கு அணி திரட்டியிருக்கிறோம், மக்க ளும், சமூகமும் சந்திக்கும் பல்வேறு பிரச்சனை நிகழ்வுகளுக்கு உரிய முறையில் பொருத்தமானதாக எதிர்வினைகளை ஆற்றியிருக்கிறேமோ? இன்னும் போதாமை கள் உள்ளதா? - இப்படி அனைத்தையும் பரி சீலனை செய்து அடுத்த மூன்றாண்டுகளுக்கு கட்சியின் அரசியல் பாதையை மிகச் சரி யாக திட்டமிட்டு, மக்கள் நலனுக்கான போராட்டங்களை கூர்மைப்படுத்துவது, கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பது என்பது குறித்து விவாதிப்பதற்காகவே, விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டைச் சிறப்புற  நடத்துவது கடமை!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு ஏனைய கட்சிகளைப் போல தலைவர் களை மட்டுமே நம்பி நடத்தும் மாநாடு அல்ல.  தோழர்களின் உழைப்பை நம்பித் தான் இம்மாநாடு நடக்கிறது. எனவே, பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் இந்தமாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டியது விழுப்புரம் மாவட்டத் தோழர்களின் கடமை யாகும். ஜனவரி 2 அன்று தொடங்கி 5-ஆம்  தேதி மாநாடு முடியும் வரைக்கும் கட்சித்  தலைவர்கள், பிரதிநிதிகள், பார்வையாளர் கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனை வரையும் வரவேற்று அரவணைத்து செல்ல வேண்டும். மாநாடு முடியும் வரைக்கும் அவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து கொடுக்க வேண்டும். 

பொறுப்புக்களை கவனத்துடன் நிறைவேற்ற வேண்டும்

செம்படை அணிவகுப்பு ஊர்வலத்தையும் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தையும், கட்டுக் கோப்பாக - கடமை தவறாமல், பொறுப்புடன் நடத்தி முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் நமது கட்சியின் மாநாட்டிற்கும் உள்ள வேறுபாடு களை விழுப்புரம் மாவட்ட மக்கள் மட்டு மின்றி மாநில மக்களும் உற்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, மிகப்பெரிய பொறுப்பை நமது கட்சித் தோழர்கள் ஒவ்வொருவரின் தோள்மீது கட்சி சுமத்தி இருக்கிறது. அந்தப் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இவ்வாறு உ. வாசுகி உரையாற்றினார்.