tamilnadu

img

‘இண்டிகோ விமான பிரச்சனையை அரசு தடுக்க தவறி விட்டது’

‘இண்டிகோ விமான பிரச்சனையை  அரசு தடுக்க தவறி விட்டது’

புதுதில்லி  இண்டிகோ விமான நிறுவனம் தொடர்ந்து தனது விமான புறப் பாடுகளை ரத்து செய்தும் தாமதப்படுத்தியும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் லட்சக் கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  விமான பயண ஒழுங்குமுறை விதிகளை வளைத்துக் கொள்வதற்காக இண்டிகோ திட்டமிட்டு இவ்வாறான குழப்பத்தை உருவாக்கி வருகிறது என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.  இந்நிலையில் இது தொடர்பான வழக்கு ஒன்றில், இண்டிகோ நிறுவ னம் உருவாக்கிய குழப்பத்தை ஒன்றிய அரசு முன்கூட்டியே தடுக்கத் தவறி விட்டது என உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. கடந்த 10 நாட்களில் 4 ஆயிரத்துக் கும் அதிகமான விமான புறப்பாடுக ளை  இண்டிகோ நிறுவனம் ரத்து செய் துள்ளது. இதன் காரணமாக லட்சக்க ணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள் ளனர்.  விமானச் சேவை கடந்த சில நாட்களாகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்து பெரும் சிக்கலுக்கு பிரச்ச னைகள் முழுமையாக சரி செய்யப் படாத நிலை தொடர்கிறது.   இந்நிலையில் மக்கள் எதிர் கொண்ட பிரச்சனைகளை குறிப்பிட்டு தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவானது  டிசம்பர் 10 அன்று தில்லி  உயர்நீதிமன்ற நீதிபதி டி.கே.உபாத்யா யா தலைமையிலான அமர்வில் விசார ணைக்கு வந்தது. விசாரணையில், இண்டிகோ விமான ரத்து, தாம தத்தால் ஏற்படும் குழப்பத்தை தடுக்க ஒன்றிய அரசு தவறிவிட்டது. லட்சக்க ணக்கான பயணிகள் விமான நிலை யங்களில் முடங்கிக் கிடந்தது  கவலை அளிக்கிறது. திடீரென ஒரு நெருக் கடி ஏற்படும்போது பிற விமான நிறுவ னங்கள் எப்படி விமான டிக்கெட் கட்டணத்தை ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை என அதிகமாக வசூ லித்து லாபம் ஈட்ட அனுமதிக்கப் பட்டன?. இத்தகைய நிலைமை மோச மானது.”என கண்டித்தது. இதையடுத்து வழக்கில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் ஷர்மா, இண்டிகோ மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’ என மழுப்ப லாகப் பேசினார் என்றார்.  இதனை  நீதிமன்றம் ஏற்க மறுத்தது. மேலும் இந்த நடவடிக்கைகள் எல்லாம் பிரச்சனை வந்த பிறகு தான் எடுக்கப்பட்டுள்ளன. முதலில் இந்த பிரச்சனை ஏன் ஏற்பட்டது? என கேள்வி எழுப்பியதுடன்  விமான நிலையங்க ளில் சிக்கித் தவித்த பயணிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம்,  சிவில் விமான போக்கு வரத்து இயக்குநரகம் (DGCA) மற்றும் இண்டிகோ நிறுவனம்  விரைவாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது.