tamilnadu

முதல் ஆயிரம் நாட்கள்

முதல் ஆயிரம் நாட்கள்

வாழ்வின் முதல் ஆயிரம் நாட்களில் கொடுக்கப்படும் குறைந்த அளவு சர்க்கரை பிற்கால வாழ்வில் டைப்2 சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது என்று புதிய ஆய்வு கூறுகிறது. கருப்பையில் இருக்கும்போதும் பிறந்து சில காலம் தாயிடம் இருந்தும் பிறகு பார்முலா மற்றும் சிசு உணவுகள் மூலம் சிசுக்களுக்கு மற்றவற்றுடன் வழங்கப்படும் சர்க்கரை அளவின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. குழந்தைப் பருவத்தில் இருந்தே சர்க்கரை கட்டுப்பாடு தாயின் கருப்பையில் இருக்கும் மற்றும் பிறந்து  சிசுக்களாக இருக்கும் குழந்தைகளுக்கு மற்ற சத்து களுடன் சேர்த்து ஊட்டப்படும் உணவில் உள்ள சர்க்க ரையின் அளவை உணவுக் கட்டுப்பாட்டு வழிகாட்டு தல்களின்படி குறைத்து கொடுத்தால் வாழ்வின் நடுத்தர வயதில் அவர்களுக்கு ஏற்படும் டைப்2 சர்க்கரை நோய் 35 சதவிகிதமும் உயர் இரத்த அழுத்தம் 20 சதவிகிதமும் குறைவாக ஏற்படுகிறது.  குழந்தைப் பருவத்தில் கொடுக்கப்படும் குறை வான சர்க்கரையுடன் உள்ள உணவு டைப்2 சர்க்கரை  நோயை நான்கு ஆண்டுகளுக்கும் உயர் இரத்த அழுத்தத்தை இரண்டு ஆண்டுகளுக்கும் தாமதப் படுத்துகிறது. “குறைவான அளவு சர்க்கரையுடன் கூடிய உணவுகள் பிற்காலத்தில் நோயற்ற வாழ்வு வாழ  உதவுகிறது. நோய்களை தாமதப்படுத்துகிறது” என்று  லாஸ் ஏஞ்சல்ஸ் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்  கழக ஆய்வாளர் டேட்ஜா க்ராஜ்னெர் (Tadeja Gračner)  கூறுகிறார். உலகப் போர் முடிந்து பத்தாண்டு காலம் யுகே- இல் சர்க்கரைக்கு ரேஷன் கட்டுப்பாடு இருந்தது. 1953 இல் இது முடிவுக்கு வந்தது. இந்த சூழ்நிலை யை ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக்குரிய இயற்கைப்  பரிசோதனை முறையாக பயன்படுத்திக் கொண்டனர்.  ஒரு நபருக்கு வழங்கப்பட்ட ரேஷன் சர்க்கரையின் அளவு இன்று சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு பரிந்து ரைக்கப்படும் நவீன அளவுக்கு சமமானது. ஆனால் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டவுடன் சர்க்கரையின் நுகர்வு 40 கிராமில் இருந்து 80 கிராம் என்ற அளவில்  இரு மடங்காக அதிகரித்தது. யுகே உயிரி வங்கியின் (BioBank) தரவுகள் இதற்காக பயன்படுத்தப்பட்டன. ரேஷன் நடைமுறையில் இருந்தபோது கருவுற்ற  அல்லது பிறந்த 38,000 பேரின் நடுத்தர வயது ஆரோக்கியத்தை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் பிறந்த 22,000 பேரின் ஆரோக்கியத்துடன் ஒப்பிட்டு  ஆய்வு செய்யப்பட்டது. இந்த பகுப்பாய்வுகள் சயின்ஸ்  (Science)என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது. ரேஷன் கட்டுப்பாடு காலத்தில் கருவுற்ற அல்லது பிறந்து இரண்டு வயதானவர்களின் டைப்2 சர்க்கரை  நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. கரு உருவாகி கர்ப்பப்பையில் இருக்கும் காலத்தில் சர்க்கரையின் குறைவான பயன்பாடு நோய் ஆபத்தை மூன்றில் ஒரு பகுதியாகக் குறைக்கி றது. உணவு மற்றும் பானங்களுடன் சேர்க்கப்படும் சர்க்கரை மற்றும் இயற்கையில் இருந்து கிடைக்கும்  தேன், சிரப்புகள், இனிப்பூட்டப்படாத பானங்கள் மற்றும் காய்களில் இருந்து தயாரிக்கப்படும் பானங்க ளில் இருந்து கிடைக்கும் சர்க்கரையின் அளவு அன்றாட கலோரி அளவில் 5 சதவிகிதத்திற்கும் அதிகமாக  இருக்கக்கூடாது. பிறப்புக்கு முன்பும் பின்பும் இது வயது வந்த ஒருவருக்கு தேசிய மருத்துவ சேவை அமைப்பின் (NHS) பரிந்துரையான 30 கிராம்  அல்லது ஏழு கன சதுர சர்க்கரைக் கட்டிகள் என்ற அளவிற்கு சமமானது. நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்படவேண்டிய சர்க்க ரைக்கு வழிகாட்டுதல் எதுவும் இல்லைஎன்றாலும் இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள், உணவுகளை தவிர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். பிரிட்டிஷ் மக்கள் பொது வழிகாட்டுதல்களை விட  உணவில் இரண்டு மடங்கு அதிக சர்க்கரையை பயன்படுத்துகின்றனர். “நாம் அனைவரும் நல்ல  ஆரோக்கியத்தை பெற விரும்புகிறோம். குழந்தை களுக்கு ஒரு நல்ல ஆரோக்கிய வாழ்வுக்கான தொடக்  கத்தை ஏற்படுத்தித் தர விரும்புகிறோம். ஆனால் குழந்தைகளின் வாழ்வின் ஆரம்பத்தில் சர்க்கரை பயன்பாட்டை குறைப்பது கடினமாக உள்ளது. சிசுக்க ளின் உணவு முதல் சர்க்கரை எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது. இனிப்பூட்டப்பட்ட தின்பண்டங்களின் விளம்ப ரங்களால் குழந்தைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றனர். பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்கள் இடையில் குறை வான சர்க்கரை உள்ள சத்துணவு பற்றிய கல்வி அறிவு மேம்படுத்தப்படவேண்டும். குழந்தை உணவு களை தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றில்  சேர்க்கப்படும் இனிப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்  டும். ஆரோக்கியமான சத்துள்ள உணவுகள் அதிக மாக சேர்க்கப்படவேண்டும். சந்தைப்படுத்துதல் ஒழுங்குபடுத்தப்படவேண்டும். இதனால் குழந்தைகளுக்கு பெற்றோர் சத்துள்ள  பொருட்கள் அடங்கிய உணவுகளை கொடுக்கமுடியும்” என்று டேட்ஜ க்ராஜ்னெர் கூறுகிறார். “அனைவ ராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஆய்வு இது. பிறப்ப தற்கு முன்பும் பின்பும் சர்க்கரையை குறைப்பது மனித  ஆரோக்கியத்திற்கு பலன் தரும் என்பதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. குறைந்த சர்க்கரையை பயன்படுத்தும் கருவுற்ற தாய்மார்கள் குறைவான உடற்பருமனுடன் உள்ளனர். இவர்கள் உண்ணும் உணவு மெதுவாக செரிமானம் அடைகிறது. இத னால் இரத்த அழுத்தமும் மெதுவாக உயர்கிறது” என்று சவுத்தாம்ப்டன் (Southampton) பல்கலைக்  கழக ஆய்வாளர் பேராசிரியர் கீத் காட்ப்ரீ (Prof Keith  Godfrey) கூறுகிறார். “குழந்தைகள் மற்றும் வயது வந்த வர்கள் அதிக சர்க்கரையை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்தை பாதிக்கிறது. குறைவான சர்க்கரை உள்ள உணவுகள் குழந்தைகளுக்கும் தாய்மார்  களுக்கும் சுலபமாக கிடைக்க பொது ஆரோக்கியத் துறை வழிசெய்யவேண்டும்” என்று லண்டன் சத்து ணவு மற்றும் வெப்ப மண்டல மருத்துவத் துறை ஆய்வா ளர் டாக்டர் நினா ரோஜர்ஸ் (Dr Nina Rogers) கூறுகிறார். ஆரோக்கியமான வாழ்வுக்கு சர்க்கரை கட்டுப் பாடு குழந்தைப் பருவத்தில் இருந்தே எவ்வாறு துணை செய்கிறது என்பதை இந்த ஆய்வு வலி யுறுத்துகிறது.