tamilnadu

img

2026 சட்டமன்றத் தேர்தல் களம் திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது!

2026 சட்டமன்றத் தேர்தல் களம் திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது!

‘இந்தியா டுடே’ ஆய்வில் தகவல்

சென்னை, மே 27 -  2026 தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, திமுக கூட்ட ணியே வலுவாக இருப்ப தாக பிரபல ஆங்கில நாளேடான ‘இந்தியா டுடே’ தெரிவித்துள் ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சரியாக ஓராண்டு உள்ள நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக - பாஜக, நடிகர் விஜயின் தவெக கட்சிகள் தங்களைப் பலப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளன. எனினும், 2026 சட்டமன்ற தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, தற்போதைய நிலைமையில் திமுக கூட்டணியே முன்னணியில் இருப்பதாக ‘இந்தியா டுடே’  நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நலத்திட்டங்கள், கூட்டாட்சிக்கான ஒருங்கிணைப்பு உள்ளிட்டவை, தமிழகத்தை தாண்டி முதலமைச்சர் மு.க.  ஸ்டாலினின் அடையாளத்தை இந்திய அளவில் கவனம் பெறச் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட், இந்தி திணிப்பு, ஆளுநரின் தலையீடு போன்ற பிரச்சனைகளில் ஒன்றிய அரசுக்கு வலுவான எதிர்ப்பை தெரிவித்து வருவதன் மூலம், திமுகவை இன்னும் நடைமுறையில் உள்ள இயக்கமாக முதலமைச்சர் ஸ்டாலின் நிலைநிறுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், வலுவான பிணைப்பு இல்லாததாக கருதப்படும் அதிமுக - பாஜக கூட்டணி, திமுக கூட்டணிக்கு  கூடுதல் வலு சேர்ப்பதாக உள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ‘வைல்டு கார்டு’ என்ட்ரி போல் அரசியலில் குதித்துள்ள தவெக தலைவர் விஜய் அதிகளவில் இளைஞர்களை ஈர்த்தாலும், அது தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.