அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய அரசியல் கட்சிகள் கோரிக்கை
காவல்துறையால் தாக்கப்பட்ட தொழிலாளி மரணம்
புதுச்சேரி, மே 27- தொழிலாளி அர்ஜுனன் மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சிபிஎம்,சிபிஐ, சிபிஐ.எம்.எல், விசிக சார்பில் புதுச்சேரி அரசை வலி யுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தினேஷ் பொன்னையா, சிபிஐ எம்எல் கட்சியின் மாநிலத் தலைவர் சோ. பாலசுப்பிர மணியன், விசிக தலைவர் தேவ.பொழிலன் ஆகியோர் ரெட்டியார் பாளையம் சிபிஎம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கூறிய தாவது: புதுச்சேரி தவளக் குப்பம் காவல் நிலைய அதி காரியின் வாய்மொழி அழைப்பின் பேரில், கடந்த 11 ஆம் தேதி இரவு, லே பாண்டி பீச் ரிசார்ட்டின் பொது மேலாள ரின் புகாரின்படி ஹோட்டலில் பணிபுரிந்து வரும் கலையரசி உட்பட நான்கு பெண் தொழிலாளர் களை காவல் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று தடியால் அடித்து உயிருக்கு ஆபத்தான முறையில் தாக்கி உள்ள னர். தவளகுப்பம் காவல் நிலையத்தின் இந்த அராஜகத்திற்கு நியாயம் கேட்கும் வகையில் கலை யரசியின் கணவர் அர்ஜு னன் மறுநாள் காவல் நிலை யத்திற்கு சென்றுள்ளார். அவரையும் காவல்துறையி னர் தாக்கியுள்ளனர். இதில் மன உளைச்சலுக்கு ஆளாகி அர்ஜுனன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சம்பவத்தன்று இறந்தார். இச்சம்பவத்திற்கு காரணமான காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சண்முகசத்தியா, சுரேஷ், காவலர்கள் பிருந்தா,வசந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கலையரசியின் குடும்பத்திற்கு இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும். பெண்கள் இரவு நேரத்தில் சட்ட விரோதமான காவல் நிலையத்தில் விசாரணை நடத்துவதை தடுக்க கடுமையான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும். இந்த வழக்கில் நீதி மற்றும் நியாயம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். நடந்த சம்பவம் குறித்து முதல்வர் ரங்கசாமிக்கும் புகார் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்த னர். இச்சந்திப்பின் போது சிபிஎம் மாநில செயற் குழு உறுப்பினர்கள் பெரு மாள், ராஜாங்கம், பிரபு ராஜ், மாநிலக்குழு உறுப்பி னர் வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் உடன் இருந்த னர். முன்னதாக, கலை யரசி குடும்பத்திற்கு நியா யம் வழங்கக் கோரி சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி கட்சி கள், விடுதலை சிறுத்தைகள் சார்பில் தவளகுப்பம் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.