tamilnadu

img

உங்களுக்காக என்றைக்கும் உழைப்பேன்

மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாட்டில் முதல்வர் உறுதி!

சென்னை, செப்.20-  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் நான்காவது மாநில மாநாட்டை யொட்டி சென்னை அருகே மறைமலைநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேருரையாற்றினார். இந்த மாநாட்டில் பங்கேற்று உங்கள் அனை வரையும் சந்திக்கும் வாய்ப்பு பெற்றமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல்  காலங்களில் மட்டும் உங்களை சந்திப்பவன் அல்ல நான். ஆட்சியில் இருந்தாலும் இல்லை  என்று சொன்னாலும் என்றைக்கும் உங்க ளோடு இருப்போம். மாற்றுத்திறனாளிகள் என்று சுயமரியாதை பெயரை சூட்டியவர் கலைஞர். ஒரு திறன் குறைந்தாலும் இன்னொரு திறன் மூலமாக வெல்லும் ஆற்றல் படைத்தவர் நீங்கள். அந்த வகையில் மற்றவர்களை விட அதிக மான திறன் கொண்டவர் நீங்கள். அதனால்தான் மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் மாற்றினார் கலைஞர்.

தங்கள் கையில் அதிகாரம் இருந்தபோது நாட்டைப் பற்றியோ, நாட்டு மக்களை பற்றியோ  கவலைப்படாதவர்கள் கடந்த பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தவர்கள், இன்றைக்கு இந்த ஆட்சியின் மீது இட்டுக்கட்டிய கதைகளை அவதூறாக பரப்ப நினைக்கிறார்கள். இப்போது போடுகிற ஆர்ப்பாட்ட கோஷங்கள் மக்களுக்கு  தெரியாதா? மக்கள் புரிந்து கொள்ளாமலா இருக்கிறார்கள்? திமுகவை பொருத்தமட்டில் எதிர்க்கட்சி யாக இருந்தாலும் சரி ஆளுங்கட்சியாக இரு ந்த போதும் சரி எப்போதும் மாற்றுத்திறனாளிக ளுடன் இருப்போம். அதிகாரத்துக்கு வந்துவிட்ட காரணத்தால் விலகிச் செல்பவர்கள் அல்ல.

இது மக்கள் அரசு!

இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் பங்கேற்றிருக்கிறார். கூட்டணி கட்சி யாக இருந்தாலும் அவ்வப்போது எங்களுக்கு ஆலோசனைகளை சொல்லி வருபவர்தான் அவர். ஆகவே, அவர் சொல்லக்கூடிய அந்த கோரிக்கைகளின் நியாயத்தை அறிந்து, புரிந்து  அதனை எந்த அளவுக்கு நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என்பது அவருக்கு தெரியும். உங் களுக்கும் புரியும். இப்படி அனைத்து மக்களு டைய அரசாக நல்ல ஆட்சியை நடத்தி வரு கிறோம். திமுக ஆட்சியில் நான்கு முதலமைச்சர் இருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி புதிதாக  ஒன்றை கண்டுபிடித்து பேசிக் கொண்டிருக்கிறார். நான்கு முதலமைச் சர்கள் அல்ல. யாரெல்லாம் நல்ல ஆலோசனை களை எங்களுக்கு வழங்குகிறார்களோ அந்த  ஆலோசனைகளை எல்லாம் செயல்படுத்து வோம். அவர்கள் அனைவரும் சேர்ந்துதான்  இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் கள். ஆகவே, இது ஒரு கட்சியின் ஆட்சியாக நீங்கள் கருத வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

15 மாதங்களில்  ரூ.759 கோடியில் திட்டங்கள்!

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்சி ராணி பேசுகிறபோது, கழக அரசு அமைந்த பிறகு செய்திருக்கக்கூடிய பணிகளை, திட்டங்களை சுருக்கமாக சொன்னார். திமுக அரசு அமைந்த பிறகு மூன்று சக்கர  மிதிவண்டி நாற்காலிகள், காதுகளுக்கு பின்புறம்  அணியக்கூடிய காதொலிக் கருவிகள், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்தி ரங்கள், பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி கள் ஆகிய ஐந்து வகை கருவிகளின் 36 மாதிரிகளில் 7,219 கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. நகரப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணம் இல்லா மல் சென்று வர உத்தரவும் வழங்கப்பட்டது. யு டி டி கார்டு வழங்குவதற்கான நடவடிக்கை  துரிதப்படுத்தப்பட்டு 9,30,909 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டனர். அவர்களில் 5,68,67 நபருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இடஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கும் பொதுக் கூட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற  தடையற்ற சூழல்களை அமைக்க சம வாய்ப்புக் கொள்கை, அனைத்து தனியார் தொழிற் போர்டுங்கள் மற்றும் நிறுவனங்களில் நடை முறைப்படுத்திட வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிறந்த அரசு நிறுவனம், தனியார் நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் இரண்டு மாநில விருதுகள் வழங்கு வதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.அரசு வேலை வாய்ப்புகளில் குரூப் ஏ மற்றும்  பி பிரிவுகளில் 559 பணியிடங்கள் கண்டறியப் பட்டுள்ளது. அதேபோல், 1096 பின்னடைவு காலிப் பணியிடங்களை தனி சிறப்பு நேர்வாக தமிழ்நாடு பணியாளர் தேர்வுவாரியம், ஆசிரி யர் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், மாநில ஆள்சேர்ப்பு, மாவட்ட ஆட்சேர்ப்பு பணியகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை மூலமாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது அல்லாமல் ஆட்சிக்கு வந்த 15 மாதத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் ரூபாய் 750 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் நிறைவேற்றித் தரப்பட்டுள்ளது. இப்படி எண்ணற்ற நலத்திட்ட உதவிகளைப் பெற்ற மாற்றுத்திறனாளிகளின் முகத்தில் இன்றைக்கு மகிழ்ச்சியை நான் பார்க்கிறேன்.

மறுக்கவுமில்லை மறக்கவும் இல்லை!

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்பட்டிருக்கிறது. இன்னும் பல கோரிக்கைகள் இருக்கிறது. நான் மறுக்கவில்லை, மறக்கவில்லை. அதை நான் மறந்து விடவும் மாட்டேன். உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவேன். உங்களுக்கு குறைந்துள்ள திறனை ஒரு கருவியின் மூலமாக நீங்கள் ஈடு செய்து கொண்டிருக்கிறீர்கள். அந்த கருவியைப் போல உங்களுக்கு உதவி செய்யக் கூடியவனாக நான் எந்நாளும் இருப்பேன். என்னையும் உங்களில் ஒருவனாக எண்ணி இந்த மாநாட்டுக்கு அழைத்து இருக்கிறீர்கள். ஒரு நம்பிக்கையோடு அழைத்திருக்கிறீர்கள். ஆகவே, நிதி ஆதாரங்களை பொறுத்தும், சில சட்ட விதிகளை அடிப்படையாக கொண்டும் உறுதியாக நிறைவேற்றப்படும். ஆகவே, நீங்கள் கவலைப்படாதீர்கள். நீங்கள் மிகுந்த சிரமப்பட்டு பல்வேறு இடையூறுகளை எல்லாம் ஏற்றுக் கொண்டுதான் இந்த மாநாட்டிற்கு வந்திருக்கிறார்கள். அதுவும் எனக்கு புரிகிறது. இந்த மாநாடு எந்த நோக்கத்தோடு நடத்தப்பட்டதோ, என்னென்ன கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதோ, அதெல்லாம் நிச்சயமாக இந்த ஆட்சியில் நிறைவேற்றி தரப்படும். நான் உறுதியோடு சொல்கிறேன் உங்கள் நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது. அந்த நம்பிக்கையோடு தான் நான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்றார்.

தத்துப் பிள்ளைகளாக பராமரிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

மறைமலைநகர், செப்.20- மாற்றுத்திறனாளிகளை தத்துப் பிள்ளை களாக அரசு பராமரிக்க வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள 13 லட்சம் மாற்றுத்திற னாளிகளின் நலன்களை பாதுகாக்கும் ஒரே  அமைப்பாக அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் விளங்குகின்றது. வேறு எந்த அமைப்பும் கற்பனையில் கூட  செய்ய முடியாத பல்வேறு பணிகளையும் சங்கம்  செய்து வருகின்றது. இந்த மாநாட்டின் துவக்கமே  இவ்வளவு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருப் பதே அதற்கு சாட்சியாக உள்ளது. 5 விழுக்காடு அளவில் உள்ள மாற்றுத் திறனாளி களின் தேவைகளை அரசு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

மாற்றுத் திறனாளிகள் நலன் குறித்து ஒன்றிய அரசுக்கு அக்கறையில்லை. மாற்றுத் திறனாளி என்பதை திவ்யாஸன் என்று பெயர் சூட்டினால் மட்டும் போதுமா? உண்மையில் தெய்வத்தின் குழந்தைகள் என நீங்கள் கருதினால் கூடுதல் நிதி ஒதுக்கி பாதுகாத்திருக்க வேண்டாமா என கேள்வி எழுப்பினார். ஒருவருக்கு ஒரு காயம் பட்டு ஆறுவதற்குள் எத்தனை வேதனைப்படுகின்றோம். காலமெல்லாம் வேதனை அனுபவித்து வரும் மாற்றுத்திறனாளிகள் மீது மோடி அரசு காட்டும் அக்கறைக்கு எடுத்துக்காட்டுதான் செயற்கை உடல் உறுப்புகளுக்கும், உதவி உபகரணங்களுக்கும் ஜிஎஸ்டி விதித்திருப்பது என்றும் சுட்டிக்காட்டினார். மாற்றுத்திறனாளி ஒருவர் இரண்டு கால்களும், கைகளும் செயல்படாத நிலையில் தொழில் நிறுவனத்தை நடத்தி வேறு சில மாற்றுத் திறனாளிகளுக்கும், வாழ்வளித்து வருதை முதல்வரே பாராட்டினார். இதுபோல் அரசு மற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் வாய்ப்பளித்தால் அவர்களும் சாதனை படைப்பார்கள் என்றும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.