tamilnadu

img

டிரம்ப் அரசின் கொடூரமும்; மோடி அரசின் அலட்சியமும்

இந்திய அரசின் அலட்சிய மும், அமெரிக்க அரசின் கடும் நடவடிக்கைகளும் இந்திய குடியேற்ற மக்களை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கி யுள்ளது. அண்மையில் நூற்றுக்க ணக்கான இந்தியர்கள் அமெரிக்கா விலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள னர். இதுதொடர்பாக இரு நாடுக ளின் அணுகுமுறையிலும் பல குறைபாடுகள் தென்படுகின்றன.

டிரம்ப் நிர்வாகத்தின் கொடூர நடவடிக்கைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனா ல்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர், குடியேற்றத்தை கட்டுப்படுத்துவ தை தனது முதன்மை நோக்கமா கக் கொண்டுள்ளார். 2024 ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1.6 லட்சம் பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 495 சர்வதேச விமானங்கள் மூலம் 145 நாடுகளைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மிகவும் கவ லைக்குரிய விஷயம் என்னவென் றால், முதன்முறையாக ராணுவ விமானங்களை பயன்படுத்தி மக் களை நாடு கடத்தும் நடவடிக்கை யை அமெரிக்கா மேற்கொண்டுள் ளது. அமெரிக்காவின் இந்த நட வடிக்கைக்கு கொலம்பிய ஜனாதி பதி குஸ்தாவோ பெட்ரோ கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இந்திய அரசின்  அசமந்தப் போக்கு

ஆனால் இந்த விவகாரத்தில் இந்திய அரசின் செயல்பாடுகளும் கண்டனத்திற்குரியவை. தற்போது அமெரிக்காவில் சுமார் 7.25 லட்சம் இந்தியர்கள் ஆவணங்கள் இன்றி வசித்து வருகின்றனர். குறிப் பாக குஜராத், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து பெருமள வில் மக்கள் சட்டவிரோதமாக குடி யேறி வருகின்றனர். இவர்கள் மெக்சிகோ, கனடா வழியாக மிக வும் ஆபத்தான முறையில் அமெ ரிக்காவிற்குள் நுழைகின்றனர். ஆனால் இந்த பிரச்சனையை தடுக்க இந்திய அரசு முன்னெச்ச ரிக்கை என்ற பெயரில் எந்த  நடவ டிக்கையும் எடுக்கவில்லை.

அடிப்படை காரணங்களை கண்டறிய தவறிய அரசு

இந்திய அரசு சட்டவிரோத குடியேற்றத்திற்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து அதற் கான தீர்வை காண வேண்டும். விவ சாய நெருக்கடி, வேலைவாய்ப் பின்மை, சமூகப் பிரச்சனைகள், பொ ருளாதாரச் சிக்கல்கள் போன்றவை மக்களை இத்தகைய ஆபத்தான முடிவுகளை எடுக்க தூண்டுகின் றன. ஆனால் அரசு இவற்றை சரி செய்ய எந்த முயற்சியும் மேற்கொ ள்ளவில்லை.

தேவையான  அடிப்படை மாற்றங்கள்

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமெனில் இரு நாடுகளும் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். அமெரிக்கா தனது கடுமையான நடவடிக்கைகளை தளர்த்த வேண் டும். அதேநேரம் இந்தியா தனது மக்கள் சட்டவிரோதமாக குடியேறு வதற்கான அடிப்படைக் காரணங்க ளை களைய வேண்டும். விவசாயிக ளின் பிரச்சனைகள், வேலைவாய் ப்பின்மை, பொருளாதாரக் சிக்கல் கள் ஆகியவற்றிற்கு தீர்வு காண வேண்டும். அப்போது தான் மக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து சட்டவிரோத குடியேற்றத்தில் ஈடு படுவதை தவிர்ப்பார்கள்.

உடனே தீர்வு காணுக!

இந்த பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளும் மனிதாபிமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். குற்றவாளிகளாக நடத் துவதற்கு பதிலாக, அவர்களின் அடிப்படை பிரச்சனைகளை புரிந்து கொண்டு தீர்வு காண வேண்டும். அப்போது தான் இந்த சட்டவிரோத குடியேற்றத்தை முழுமையாக தடுக்க முடியும்.

தி இந்து (ஆங்கிலம்) பிப்.6 தலையங்கத்தின் தமிழ் சுருக்கம்.