திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் வியாழ னன்று நடைபெற்ற இருவேறு நிகழ்ச்சிகளின்போது. முதலாவ தாக 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர் சோலார் நிறுவனம் அமைத்துள்ள உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் 2574 கோடி ரூபாய் முதலீட்டில் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இவற்றில் பெரும்பா ன்மையான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், முதலமைச்சர் தொழிற்சாலையை பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் பெண் பணி யாளர்களிடம் உரையாடி, அவர் களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், தொழிற் சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் முதலமைச்சர் “வாழ்த்துகள்” என்று எழுதி கையொப்பமிட்டார். பெண்களுக்கு 80 சதவிகித வேலைவாய்ப்பு என்பது மட்டுமின்றி, பெண் களுக்கு தங்கும் விடுதி வசதிகளும் அளிக்கப்படவுள்ளது இத்திட்டத் தின் சிறப்பம்சமாகும். இந்நிகழ்ச்சி யில், காணொலிக் காட்சி வாயிலாக டாடா குழுமத் தலைவர் என். சந்திர சேகரன் கலந்து கொண்டுபேசினார்.
அதிக திறன் கொண்ட சோலார் பிவி உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ற விக்ரம் சோலார் நிறு வனம், இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமாகும். தமிழ்நாட்டில் ஏற்கனவே காஞ்சி புரம் மாவட்டம், ஒரகடத்தில் இதன் ஆலை 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, தங்கம் தென்னரசு, பி. கீதா ஜீவன், அனிதா ஆர். ராதா கிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா, நாடா ளுமன்ற உறுப்பினர் சி. ராபர்ட், புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.அப்துல் வகாப், ரூபி மனோகரன், நயினார் நாகேந்திரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலா ளர் வி.அருண்ராய், தொழில் வழி காட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்- தலைமைச் செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, நெல்லை மாவட்ட ஆட்சியர் கே.பி. கார்த்திகேயன், டாடா பவர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரவீர் சின்ஹா மற்றும் தலைமைச் செயல் அலுவலர் டிபேஷ் நந்தா, விக்ரம் சோலார் நிறுவனத்தின் தலைவர் எமரிட்டஸ் ஹரிகிருஷ்ண சௌத்ரி, தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் க்யானேஷ் சௌத்ரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.