தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக பார்க்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசு!
இலங்கை கடற்படையால் தாக்கப்படும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க ஒன்றிய பாஜக அரசு உறுதியாக நடவடிக்கைகள் எதையும் எடுப்பதாக இல்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி னார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திங்க ளன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 139 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் 35 முடிவுற்ற பணி களை திறந்து வைத்தும், 82 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 206 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 200 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பி லான அரசு நலத்திட்ட உதவிகளை 38,956 பய னாளிகளுக்கு வழங்கியும் உரையாற்றினார். அப்போது இதுதொடர்பாக அவர் பேசிய தாவது: பிரதமர் மோடி, பதவியேற்ற கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் இது வரையிலான இந்த பத்தாண்டுகளில் மட்டும் இலங்கைக் கடற்ப டையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுடைய எண்ணிக்கை 3,656 பேர்! அதில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் மட்டும் 860 பேர்! மொத்தம் 611 விசைப் படகுகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள். அதில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வர்களின் விசைப்படகுகள் மட்டும் 116. கடந்த 2024, நவம்பர் 22 வரை, இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களை 736 முறை தாக்கியிருப்பதாக, நான் சொல்ல வில்லை.
வெளியுறவுத் துறை இணை அமைச்சரே அறிக்கை தாக்கல் செய்திருக் கிறார். இலங்கையில் என்ன பிரச்சனை என் பதை தெளிவாகவும், என்னென்ன பாதிப்பு என்பதையும் இணை அமைச்சர் ஆதாரத்து டன் தாக்கல் செய்திருக்கிறார். இந்தப் பிரச்ச னைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு, ஒன்றிய அரசுக்குதான் இருக்கிறது! ஆனால், செய்கிறார்களா? இல்லை. 2010-ஆம் ஆண்டு முதல் இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் இடையே பல கட்டங்களாக நடந்த பேச்சு வார்த்தைகள், இப்போது நடப்ப தில்லை. 2016-ஆம் ஆண்டு இந்திய இலங்கை மீனவர் இடையே, அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் மீறப்படுகின்றன! இலங்கை கடற்படையின் அடக்குமுறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இலங்கையின் வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டத்தால் கொடுமைகள் அரங்கேறு கின்றன! இதுபற்றி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் என்ன சொல்கிறார்? “இந்திய அரசின் தரப்பில், வெளியுறவுத்துறை, மீன் வளத்துறை அதிகாரிகள் நான்கு பேரும், இலங்கை அரசின் தரப்பில் நான்கு பேரும் இணைந்து, ஒரு குழு அமைத்து, தமிழக மீனவர் பிரச்ச னைக்கு தீர்வு கண்டு வருகிறோம்” என்று சொன்னாரே தவிர, இதுவரை எதுவும் நடந்த தாக தெரியவில்லை! அதற்கு முதலில், தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக ஒன்றிய அரசு பார்க்க வேண்டும். பாரதப் பிரதமர் நேரடியாக தலையிட்டு தீர்க்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் காலம் காலமாக தொடர்ந்து கொண்டே இருக்க முடியாது! இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்! இவ்வாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். மேற்கொண்டு பேசுகையில், நாகப்பட்டி னம் மாவட்ட வளர்ச்சிக்காக ஆறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார்.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என். நேரு, ஏ.வ. வேலு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வ ராஜ், மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ், கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை வி.பி. மாலி, நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ், மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என். கௌதமன், தாட்கோ தலைவர் உ. மதிவா ணன், வருவாய் கோட்டாட்சியர் செல்வி, இரா. பேபி மற்றும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.