தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக-அதிமுக கூட்டணி துடைத்தெறியப்பட வேண்டும்
துக்கோட்டை, பிப்.23- “தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பாஜகவோடு அதி முக கூட்டணி வைத்துள்ளதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் அக்கூட்டணி துடைத்தெறியப் பட வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசி னார். புதுக்கோட்டை மாவட்டம் கந்த ர்வக்கோட்டையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரையின் 5 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கந்தர்வக்கோட்டை தொகுதியின் ‘சாதனை மலரை’ வெளியிட்டு பெ.சண்முகம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: மக்களுக்கான சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த 5 ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான நாகை மாலி மற்றும் எம்.சின்ன துரை ஆகியோர் சட்டப்பேரவை யில் சிறப்பான பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர். கூட்டணியில் இருந்தாலும், மக்கள் நலனைப் பாதிக்கும் திட்டங்களை உறுதியாக எதிர்ப்பதுடன், மக்களுக்குச் சாதக மான சட்டங்களை ஆதரிப்பதே கம்யூ னிஸ்டுகளின் கடமை. எங்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் அந்தந்தத் தொகுதிகளுக்கு மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமுள்ள மக்க ளுக்கான கோரிக்கைகளை எழுப்பும் குரலாகத் திகழ்கின்றனர். ஒன்றிய அரசின் வஞ்சகமும் திமுகவின் மக்கள் நலப்பணிகளும் தமிழக முதல்வர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கத் தீவிர முயற்சி எடுத்தாலும், ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு வர வேண்டிய நிதி ஆதாரங்களை முடக்கி வஞ்சித்து வருகிறது. தமிழகத்திற்கு எதையும் செய்யாத பாஜகவினர் ஆட்சி அமைப்போம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. அதே சமயம், கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு 20 ஆண்டுகாலத் தீர்க்கப் படாத கோரிக்கைகளை நிறை வேற்றியுள்ளது. குறிப்பாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வூ தியப் பிரச்சனை மற்றும் போக்கு வரத்துத் தொழிலாளர்களின் பணப் பலன்களுக்காகச் சுமார் 2,500 கோடி ரூபாயை ஒதுக்கிச் சாதனை படைத்துள்ளது. மகளிர் உரிமைத் தொகையை முடக்க பாஜக செய்த சதியை முறி யடித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோடைகால சிறப்பு நிதி யுடன் 5,000 ரூபாய் கிடைக்கச் செய் துள்ளார். கார்ப்பரேட் முதலாளி களுக்கு வரியைத் தள்ளுபடி செய்யும் ஒன்றிய அரசு, ஏழை மக்க ளுக்கு வழங்கும் நிதியை ‘இலவசம்’ என விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. தேர்தல் நிலைப்பாடு திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடை பெற உள்ளது. இம்முறை இரட்டை இலக்க எண்ணிக்கையில் போட்டி யிடத் திட்டமிட்டுள்ளோம். கந்தர்வக் கோட்டை தொகுதியில் சிபிஎம் மீண்டும் போட்டியிடும், மக்கள் பேரா தரவை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாற்றுக்கட்சியினர் 27 பேர் சிபிஎம்-ல் இணைந்தனர் இப்பொதுக்கூட்டத்தின் மற் றொரு முக்கிய நிகழ்வாக, கந்தர்வக் கோட்டை வடக்கு ஒன்றியம் முரட்டுச் சோளகம்பட்டி, தச்சங்குறிச்சி மற்றும் கல்லுப்பட்டியைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 27 பேர் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர். அவர்களை மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சிவப்புத் துண்டு அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண் டர்கள் கலந்துகொண்டனர். (ந.நி.)
