வெண்மணித் தியாகிகளின் 57-ஆம் ஆண்டு செவ்வணக்க நாள் ஏழை எளியோரின் உரிமைகளுக்காகத் தொடரும் சமர்!
நினைவிடத்தில் தலைவர்கள் உணர்ச்சிகர அஞ்சலி! நாகப்பட்டினம், டிச. 25 - தமிழக வரலாற்றில் ஈடு இணைய ற்ற தியாகத்தின் அடையாளமாக விளங்கும் கீழவெண்மணி தியாகி களின் 57-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழனன்று தமிழகம் முழு வதும் உணர்வுப்பூர்வமாக கடைப் பிடிக்கப்பட்டது. 1968-ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று நிலப்பிரபுக்களின் கொடுமைக்கும், பண்ணை அடிமைத்தனத்திற்கும் எதி ராகப் போராடி இன்னுயிரைத் தியாகம் செய்த 44 விவசாயத் தொழிலாளர் களின் நினைவிடத்தில், அகில இந்திய மற்றும் மாநிலத் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியின் துவக்கமாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் செங்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ் ஷ்ணன், உ. வாசுகி, மத்தியக் கட்டுப் பாட்டுக்குழு தலைவர் ஜி. ராம கிருஷ்ணன், சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் அ. சவுந்தரராசன், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன், மாநிலப் பொதுச்செய லாளர் சாமி. நடராஜன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் ஏ. லாசர், மாநிலத் தலைவர் எம். சின்னத்துரை எம்எல்ஏ, மாநிலப் பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங்கம், சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஏ.ஏ. ரஹீம் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு செயலாளர் கோ. பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் கே. சாமுவேல்ராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச்செய லாளர் பி. சுகந்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர்கள் நாகை மாலி எம்எல்ஏ, ஐ.வி. நாகராஜன், ஆர். பத்ரி, ஏ.வி. சிங்கார வேலன், மூத்த தலைவர் என். சீனி வாசன், எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் உள்ளிட்ட தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் கே. பால கிருஷ்ணன், உ. வாசுகி, மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் உள்ளிட்ட தலை வர்கள் உரையாற்றினர். நாகை கிழக்கு கலைக்குழுவின் நாடகம், புதுகை சப்தர் ஹஸ்மி குழுவினரின் பாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக வெண்மணியில் கட்சியின் புதிய அலுவலகத்தை, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் திறந்து வைத்தார். தஞ்சை மண்ணில் மார்க்சிய இயக்கம் 1920 முதல் 2024 வரை ஆற்றிய பணிகளின் தொகுப்பாக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதியுள்ள “திருப்பியடித்த வரலாறு” நூலுக்கான முன்வெளியீட்டு திட்டத்தையும் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் துவக்கி வைத்தார்.
