tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

100 மினி பேருந்துகள் வாங்க டெண்டர் வெளியீடு

சென்னை, மே 12 - மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 100 மினி பேருந்துகள் கொள்முதல் செய்யப் படவுள்ளது. 2013 ஆம் ஆண்டு முதல் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் போக்குவரத்து சேவை வழங்கும் வகை யில், மினி பேருந்து இயக்கத்தை மாநகர போக்குவரத்துக் கழகம் தொடங்கியது. தற்போது 146 மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 22 பேருந்து கள் மெட்ரோ ரயில் பயணிகளின் சேவைக் காகவே பிரத்யேகமாக இயங்குகின்றன. இந்நிலையில் பேருந்து சேவையை விரி வாக்கம் செய்யும் வகையில் மேலும் 100 மினி பேருந்துகள் கொள்முதலுக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜிபிஎஸ், பானிக் பட்டன், பார்க்கிங் கேமரா  உள்ளிட்ட நவீன வசதிகளுடன் ரூ.34 கோடி யில் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட வுள்ளன. ஜூன் 15 ஆம் தேதி முதல் புதிய விரிவான மினி பேருந்து சேவை அமலுக்கு  வரும் நிலையில், அரசு மேலும் 100 பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிட்டுள்ளது.

தீண்டாமையின் இன்னொரு வடிவம்

சென்னை, மே 12 - பெரியபுராணம் எழுதிய சேக்கிழார், குன்றத்தூரில் கட்டிய திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் மே 13-இல்  துவங்கி 16 வரை நடைபெற உள்ளது.  இந்த கோவில் விழாவுக்கு குறிப்பிட்ட சமு தாயத்தினரிடம் மட்டுமே நன்கொடைகள் வசூலிக்கப்பட்டதாகவும், மற்ற சமு தாயத்தினரிடம் நன்கொடைகள் வசூ லிக்கப்படவில்லை என்றும் கூறி சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, “தீண்டாமை இந்நாட்டில் பல்வேறு வழிகளில் பின்பற்றப் படுகிறது. அந்த வகையில் சாதியை காரணம் காட்டி நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் இன்னொரு வடிவம்” என வேதனை தெரிவித்துள்ளார்.

பிளஸ்-2 விடைத்தாள் நகலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, மே 12 - தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித் தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8,21,057 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த 8 ஆம் தேதி வெளிவந்தன. மொத்தம் 95.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.  இந்நிலையில், பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வியில் சேருவதற்கு வசதியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 12 அன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி, திங்களன்று காலை 11 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தற்காலிக சான்றி தழை, தலைமையாசிரியர்கள் பள்ளியின் முத்திரையுடன் கையெழுத்திட்டு மாண வர்களுக்கு வழங்கினர். இதற்கிடையே, பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற செவ்வாய்கிழமை (மே13) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் மே 17 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக அனைத்து பாடங்களுக்கும் ரூ.275 செலுத்த வேண்டும். நகலைப் பெற்றவுடன் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.