tamilnadu

img

தேஜஸ் ரயிலும்... பயணிகள் அனுபவமும்...

மதுரை:
தேஜஸ் ரயிலில் காபி, டீ, உணவு வகைகள் கிடைக்காததால் அதில் பயணித்த பயணிகள் நொந்துபோயினர்.

போதுமான பயணிகள் இல்லை என்ற காரணத்தைக் கூறி ரயில்வே நிர்வாகம் தேஜஸ் ரயிலை ரத்து செய்திருந் தது. பயணிகள், மக்களவை உறுப்பினரின் தொடர் அழுத்தம்காரணமாக ஜனவரி 10-ஆம் தேதி (ஞாயிறு) முதல் தேஜஸ்ரயில் இயக்கப்பட்டது. ஞாயிறன்று சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்ட ரயிலில் பயணம் செய்த பயணிகள் நொந்துபோயினர்.

தங்களது பயண அனுபவம் குறித்து பயணிகள்கூறியதாவது:-

நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெ.ஜெரின் (34) என்ற பயணிகூறுகையில், தேஜஸ் ரயில் காலை ஆறு மணிக்கு சென்னைஎழும்பூரிலிருந்து புறப்படுகிறது. அந்த நேரத்தில் உணவகங்கள் திறக்கவில்லை. காலை ஆறு மணிக்கு புறப்படும் ரயிலைபிடிப்பதற்காக அதிகாலையில் வந்துவிட்டதால் வீட்டில் உணவு சமைக்கவோ. தண்ணீர் பாட்டில் வாங்கவோ நேரமில்லை. இது குறித்து பயணி ஒருவர் ரயில்வே ஊழியரிடம் விசாரித்ததற்கு உணவு, குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது எனக்கூறினார். இதனால் தண்ணீர் கொண்டு வரத் தவறிய  பயணிகள் பலர் ரயில் திருச்சிராப்பள்ளியை வந்தடையும் வரை கஷ்டப்பட்டனர். இதில் துரதிருஷ்டவசமானது என்னவெனில்,ரயில் திருச்சிராப்பள்ளிக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது.பயணிகள் சிலர் பயணச் சீட்டு ஆய்வாளர்களிடம் ரயிலை ஐந்து நிமிடங்கள் கூடுதலாக நிறுத்துமாறும் இது தண்ணீர், உணவுகள் வாங்க உதவியாக இருக்குமென்றனர். மேலும் ரயிலில் கழிப்பறைகள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் புகார் கூறினார்.

ரயில் ஏற்கனவே காலதாமதமாக சென்று கொண்டிருப்பதால் கூடுதல் நேரம் வாய்ப்பில்லை என பயணச்சீட்டு ஆய்வாளர் கூறிவிட்டதாக தேனியைச் சேர்ந்த பயணி ஏ.ராமச்சந்திரன் (62) கூறினார். மேலும் அவர் கூறுகையில், “ஆன்லைன் பயணச்சீட்டில் எந்த உணவும் வழங்கப்பட மாட்டாதுஎன்று குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், வழக்கமாக ரயிலில்விற்கப்படும் தண்ணீர் பாட்டில், காபி, டீ, உணவுப் பொட்டலங்கள் கூட கிடைக்கவில்லையென்றார்.பயணிகள் சந்தித்த பிரச்சனைகள் குறித்து ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “ரயில் இயக்கப்படுவது திடீரென அறிவிக்கப்பட்டதால், ரயிலை இயக்கும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனால் உடனடியாக தண்ணீர், உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியாது என்றார்.இதற்கிடையில் தேஜஸ் ரயிலில் செவ்வாய்க்கிழமை முதல் காபி, டீ, நூடுல்ஸ் விற்பனை மீண்டும் தொடங்கப் பட்டது.