தரமணி தொழில்நுட்ப வளாகம் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும்'
அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
சென்னை, ஏப்.25 - தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தனது துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து பேசு கையில், “செம்மொழியான தமிழ் மொழியின் சிறப்பை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில், கல்லூரிகளில் “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி கள் ரூ.3 கோடி செலவில் நடத்தப் படும். அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பசுமைத் தோற்ற முகப்பு மற்றும் ஒரே மாதிரி யான கல்லூரி பெயர் பலகைகள் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்” என்றார். அரசு கல்லூரிகளில் கலைத் திரு விழா தலா ரூ.2 லட்சம் வீதம் ஒதுக்கி ஆண்டுதோறும் நடத்தப்படும். அரசு கல்லூரிகளில் விளையாட்டு வசதி கள் தலா ரூ.1.5 லட்சத்தில் மேம்படுத் தப்படும். அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளுக்கு தேவைப்ப டும் புதிய பாடப்பிரிவுகளை பரிந்துரை செய்ய, பாடப்பிரிவு பரிசீலனைக் குழு அமைக்கப்படும் என்றும், அரசுக் கல்லூரி மாணாக்கர்கள் வெளி நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங் களில் ஒரு பருவம் கல்வி பயில்வ தற்கு அழைத்துச் செல்லப் படுவார்கள் என்றும் அமைச்சர் அறிவித்தார். பின்னர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். “அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணாக்கர்கள் சங்கம் தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத் தப்படும். மாநில உயர்கல்வி நிறுவனங் களுக்கான தரவரிசை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்படும். அந்தியூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 2 அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரிகளுக்கு தலா ரூ.17.50 கோடியில் கட்டிடங்கள் கட்டப்படும். சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்திற்கு “புதிய நடமாடும் அறிவியல் கண்காட்சிப் பேருந்து” ரூ.80 லட்சத்தில் வாங்கப் படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகளில் அருகலை வசதி ஏற்படுத்தப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறை களுக்குத் தேவையான தளவாடங் கள் ரூ.5 கோடியில் கொள்முதல் செய்யப்படும். சுற்றுச்சுவர் இல்லாத அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சங்கிலி இணைப்பு வேலி ரூ.5.02 கோடியில் அமைக்கப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் ஊடாடும் திறன் பலகைகள் ரூ.4.35 கோடியில் நிறுவப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கான உள்ளிடைப் பயிற்சி, வேலை வாய்ப்பு வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மையம் மேம்படுத்தப்ப டும். முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணாக்கர்களுக்கான வலை முகப்பு ரூ.60 லட்சத்தில் உருவாக்கப் படும். சென்னை, தரமணி, மைய தொழில்நுட்ப வளாகம் ரூ.100 கோடி யில் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட 39 அறிவிப்புகளை வெளியிட்டார்.