தமிழ்நாட்டிற்கு ரூ. 3,201 கோடி முதலீடு ஜெர்மன் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
சென்னை, செப். 1 - தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடு களை ஈர்க்கும் வகையில் ஜெர்மனி யின் மூன்று முக்கிய நிறுவனங்களு டன் ரூ. 3,201 கோடி முதலீட்டில் சுமார் 6,250 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. முக்கிய ஒப்பந்தங்கள் நோர் ப்ரெம்ஸ் நிறுவனம்: முனிச்சை, தலைமையகமாக கொண்ட இந்நிறுவனம் காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் ரூ. 2,000 கோடி முதலீட்டில் ரயில்வே கதவுகள் மற்றும் பிரேக்கிங் அமைப்புகளுக்கான அதி நவீன வசதியை நிறுவும். இதில் 3,500 பேருக்கு வேலை கிடைக்கும். முதன்மை செயல் அலுவலர் மார்க் லிஸ்டோசெலா மற்றும் துணைத் தலைவர் ஓலிவர் கிளக் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நோர்டெக்ஸ் குழுமம்: ஹேம்பர்க்கை தலைமையகமாக கொண்ட உலகின் மிகப்பெரிய காற்றாலை உற்பத்தி யாளர்களில் ஒன்றான இந்நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆலையை ரூ. 1,000 கோடி முதலீட்டில் விரிவுபடுத்தி 2,500 பேருக்கு வேலை வழங்கும். முதன்மை செயல்பாட்டு