tamilnadu

img

தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடுகிறது!

தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடுகிறது! 

ஆளுநர் உரையாற்றுகிறார்

ஆளுநர் உரையாற்றுகிறார் சென்னை, ஜன. 19 - தமிழ்நாடு சட்டமன்றம், செவ்வாய்க்கிழமை (ஜன. 20) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரை, ஆளுநர் உரை யாற்றி துவக்கி வைப்பது வழக்கம். அந்த வகையில், 2026-ஆம் ஆண்டில் கூடும் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளு நர் ஆர்.என். ரவி உரையாற்ற உள்ளார். உரை நிகழ்த்துவதற்காக சட்டப்பேர வைக்கு வரும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, மரபுப்படி வரவேற்பு அளிக்கப் படும். அவரை அவைக்குள் சட்டப்பேர வை தலைவர் மற்றும் பேரவைச் செய லாளர் ஆகியோர் அழைத்து வருவர். பேர வைத் தலைவர் இருக்கையில் ஆளுந ரும், அருகில் உள்ள இருக்கையில் பேரவைத் தலைவரும் அமர்வர். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப் படும். பின்னர் ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். அந்த உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் வாசிப்பார். உரையின் நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதோடு முதல் நாள் அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். அதன்பின்னர் பேரவைத் தலைவர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். அதில், கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, என்னென்ன விவகாரங்களை அலு வலுக்கு எடுத்துக் கொள்வது போன்ற வை குறித்து முடிவு செய்யப்படும்.