tamilnadu

img

நாட்டின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழக உற்பத்தி 3 மடங்கு அதிகம்

நாட்டின் உற்பத்தி வளர்ச்சியை விட  தமிழக உற்பத்தி 3 மடங்கு அதிகம்

முதலமைச்சர் பெருமிதம் சென்னை, பிப்.12 - இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை காட்டிலும் தமிழ்நாட் டின் உற்பத்தி வளர்ச்சி மூன்று  மடங்கு அதிகம் என்று முதல மைச்சர் தெரிவித்தார். சென்னை கிண்டியில் வியாழக் கிழமை (பிப்.12) நடைபெற்ற செயலாக்க மாநாட்டில் 74,267 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங் களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்தார்.  மேலும், 71 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற  52 திட்டங்களையும் திறந்து வைத்தார். டாபர், மகேந்திரா ஆராய்ச்சி மையம், பிரிட்டானியா,  லூலூ குரூப், டாடா கெமிக் கல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவ னங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த மாநாட்டில் உரை யாற்றிய முதலமைச்சர், “இந்தியா வின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ கத்தின் பங்கு மட்டும் 41 சதவீதமாக உள்ளது.  கடந்த ஆண்டு இந்தி யாவின் உற்பத்தி திறன் 4.5 சதவீதமாக இருந்த நிலையில், தமிழ்நாட்டில் 14.7 சத வீதமாக உள்ளது. இந்தியாவின் உற்பத்தி  வளர்ச்சியை விட தமிழகத்தின் உற் பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம்.  2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவது என்ற இலக்கு இருப்பதாகவும், தொழில்துறையில் செய்த சாத னைகளை அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் நாங்களே முறி யடிப்போம்” என்று உறுதியாக கூறினார்.