tamilnadu

img

பொது வேலைநிறுத்தத்தையொட்டி வர்க்க வெகுஜன அமைப்புகள்

பாதுகாப்புத் துறை ஊழியர்கள் 2 லட்சம் பேர் பணிப் புறக்கணிப்பு!

சென்னை ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நாடு முழுவதும் பாதுகாப்புத்துறை ஊழியர்கள் 2 லட்சம் பேர் ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு செய்து வியாழனன்று (பிப். 12) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனொரு பகுதியாக, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை அருகே ஆவடி ஓசிஎப் ஆலை வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி. ஸ்ரீகுமார்,  தொமுச பொதுச்செயலாளர் ஏ. முகமது மீரா, இந்திய தேசிய தொழிலாளர் சங்க செயலாளர் ஏ. பாலமுரு கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ஸ்ரீகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 100 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய உழைப்பாளி மக்கள், பாதுகாப்புத்துறை ஊழியர்கள் போராடிப் பெற்ற தொழிற்சங்க உரிமைகள், வேலை நிறுத்தம் செய்யும் உரிமைகள் ஆகியவை இன்றைக்கு புதிய தொழிலாளர் தொகுப்பில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அரசுத்துறை நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் பெரும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் தனியாரிடம் ஒப்படைக்கும் கொள்கையை ஒன்றிய அரசு தீவிரமாக அமல்படுத்துகிறது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு பங்களிப் பில்லாத பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. 8-ஆவது ஊதியக்குழு 69 லட்சம் ஒன்றிய அரசு பென்ஷன்தாரர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யாது என்று கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் இந்திய உழைப்பாளி மக்களுக்கு ஆதரவாக பாதுகாப்புத்துறை ஊழியர்கள் நிறுவனங்களின் வாயிலில் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டமும், ஒருமணி நேரம் காலதாமதமாக பணிக்குச் செல்ல முடிவெடுத்து அதனடிப்படையில் நாடெங்கிலும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்புத் துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளும் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணமாக மதிய உணவையும் புறக்கணித்தனர். ஆவடியில் உள்ள படைத்துறை உடைத்தொ ழிற்சாலை, திண் ஊர்தி தொழிற்சாலை மற்றும் இன்ஜின் தொழிற்சாலை உட்பட பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் மற்றும் திருச்சி, அரவங் காட்டில் உள்ள பாதுகாப்புத்துறை தொழிற்சாலை ஊழியர்கள் பெருமளவில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்று அவர் தெரிவித்தார்.