tamilnadu

img

மக்கள் விரோத ஒன்றிய மோடி அரசுக்கு எதிராய் ஆவேசம்

மக்கள் விரோத ஒன்றிய மோடி அரசுக்கு எதிராய் ஆவேசம்

கோவை, பிப்.12- ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து, தமிழகம் முழுவதும் மாணவர், வாலிபர்,  மாதர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்,  இன்சூரன்ஸ், வங்கி உள்ளிட்ட பல் வேறு துறைகளை சேர்ந்த அமைப் பினர் ஆவேச போராட்டங்களில் ஈடு பட்டனர். ஒன்றிய பாஜக அரசின் புதிய தொழி லாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப்  பெற வலியுறுத்தி வியாழனன்று நாடு  முழுவதும் தொழிற்சங்கத்தினர் மற்றும்  விவசாய சங்கத்தினர் பொது வேலை  நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத் திற்கு அறைகூவல் விடுத்தனர்.  இப்போராட்டத்திற்கு அதரவாக வும், ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், மாணவர் கள், இளைஞர்கள், பெண்கள், தொழி லாளர்கள், விவசாயிகளின் நலன்களை பாதுகாத்திட வலியுறுத்தி வெகுஜன அமைப்புகள் போராட்டத்தில் போராட் டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதி யாக வடகோவை ரயில் நிலையம் முன்பு  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,  இந்திய மாணவர் சங்கங்களின் சார்பில்  ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு, மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் தங்கமணி வகித்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா,  மாவட்டத் தலைவர் ராஜா, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அகமது ஜுல்பிகர், மாவட்டத் தலை வர் பாவேல் உள்ளிட்ட 60க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்  சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர்  அலுவலக வளாகத்தில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலை வர் ச. ஜெகநாதன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் ப.செந்தில் குமார் துவக்கவுரையாற்றினார். தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.லதா, தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச்  செயலாளர் கமலஹாசன், தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க பொதுச் செயலாளர் ஏ.பிரகலதா ஆகி யோர் கண்டன உரையாற்றினர். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் ப.நடராஜன் நன்றி கூறி னார். சேலம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சங்க மாவட்டத் தலை வர் அர்த்தநாரி தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் சுரேஷ், பொருளாளர் சண்முகம் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாநில அரசு ஊழியர் கூட்ட மைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ரமேஷ்  தலைமை வகித்தார். தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்க மாநிலத் தலை வர் மு.சீனிவாசன், தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் கு.குமரேசன் மற்றும்  அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் ச.விஜயமனோகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஈரோடு வருமான வரித்துறை அலுவ லக வளாகத்தில், வருமான வரி ஊழி யர்கள் கூட்டு போராட்டக் குழுவின்  தலைமையில் நடைபெற்ற தர்ணாவில்,  அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் சங்க செயலாளர் பிரித்திவிராஜ் மற்றும்  ஊழியர் சங்க செயலாளர் மேபிள்  குயினி பயஸ் ஆகியோர் கோரிக்கை கள் விளக்கிப் பேசினர். மத்திய அரசு  ஊழியர் இணைப்புக் குழுவின் மாவட் டச் செயலாளர் என்.ராமசாமி வாழ்த் திப் பேசினார். ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தபால் காரர் சங்கத் தலைவர் எஸ்.சுரேஷ் தலைமை வகித்தார். குரூப் சி ஊழியர் சங்கச் செயலாளர் டி.சக்திவேல் கோரிக்கைகள் விளக்கிப் பேசினார். மத்திய அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் என்.ராமசாமி வாழ்த்திப் பேசினார். இதில், ஏராளமான அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர். தருமபுரி காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின்  சார்பில் தருமபுரி எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, காப்பீட்டு கழக ஊழியர் சங்க தலை வர் ஏ. சங்கர் தலைமை வகித்தார். கோட்ட இணை செயலாளர் பி. சந்திர மௌலி, பொருளாளர் சங்கர், எல்ஐசி முகவர்கள் சங்க மாவட்டத் தலைவர் மரியம்லூயிஸ், எல்ஐசி லிகாய் முகவர் கள் சங்க கோட்ட தலைவர் சிவமணி, எல்ஐசி பென்சன்தாரர் நலச் சங்க மாவட்டத் தலைவர் ஏ. மாதேஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். போக்குவரத்தும் நிறுத்தம் ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய  நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்பு களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு  முழுவதும் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் பொது வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் அண்டை  மாநிலமான கேரளாவில் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற பொது வேலை நிறுத்தம் முழுமையாக வெற்றி யடைந்துள்ளது. கேரளாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந் துகள், ஆட்டோக்கள், வாகனங்கள் நிறுத்தப்பட்டது. வாளையாறு, கஞ்சிக் கோடு, பாலக்காடு உள்ளிட்ட மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டுள்ளது. தினமும் கேரளாவில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து கேராளாவிற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. கஞ்சிக்கோடு பகுதியில் சிஐடியு பாலக்காடு மாவட்ட இணைச் செயலா ளர் கே.சுரேஷ் தலைமையில் தொழிற் சங்கத்தினர் பேரணியாக சென்று ஒன் றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.