பொது வேலைநிறுத்தம் - மறியல் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி! பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று கைது
சென்னை, பிப். 12 - தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் மோடி அரசுக்கு எதிராக, மத்தியத் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில் நடத்திய பொது வேலைநிறுத்தம் தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், மாநில அரசுத்துறை நிறுவனங்கள், தனியார் பன்னாட்டு நிறுவனங்களில் மட்டுமன்றி, அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், சிறுகடை வியாபாரிகள் என பல லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இந்த வேலைநிறுத்தத்தை ஆதரித்து, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வாலிபர்கள், மாதர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்றிய அரசு அலுவலகங்களை முற்றுகை யிட்டும், ரயில்களை மறித்தும் பல்லாயிரக்கணக்கில் கைதாகினர். தொழிலாளர்களை கொத்தடி மைகளாக்கும், தொழிற்சங்கத்தை அழிக்கும் 4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை, மோடி அரசு திரும்பப் பெற வேண்டும், மகாத்மா காந்தி நூறுநாள் வேலை உறுதியளிப்பு சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், மின்சார திருத்தச் சட்டம்- 2025ஐ, அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் ஷாந்தி - 2025 சட்டம், விதை மசோதா - 2025 உள்ளிட்ட மக்கள் விரோதச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் பிப்ரவரி 12 அன்று அகில இந்திய அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. சென்னை - கிண்டி இதனொரு பகுதியாக, கிண்டி அஞ்சலகம் முன்பு நடை பெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ. சவுந்தரராசன் தலைமை தாங்கினார். அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் தீ. சந்துரு, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜி. செந்தில்குமார், ஐஎன்டியுசி தலைவர் ஜோதி பொன்னம்பலம் மற்றும் ஆர். அழ கேசன் (ஏஐடியுசி), க. தேசிங்கு, கோமளாதேவி (யுடியுசி) உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது, செய்தி யாளர்களிடம் சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன், “நாடு முழு வதும் பல்லாயிரக்கணக்கான மையங்களில் மறியல் நடை பெற்றது. சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எல்பிஎப் போன்ற 10 சங்கங்கள், 50-க்கும் மேற்பட்ட அகில இந்திய சம்மேளனங்கள், விவ சாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தை நடத்துகின்றன. 30 கோடி பேர் பங்கேற்றுள்ளனர். புதிய தொகுப்பு சட்டங்களால் தொழிலாளர்களுக்கு இருந்த குறைந்தபட்ச சட்டப் பாதுகாப்பும் பறிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தின் போது கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றவில்லை. எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை. நூறுநாள் வேலை திட்டத்தை சிதைத்துள்ளனர். பாரம்பரிய விதைகளை அழிக்கும் வகையில் விதைச்சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இலவச மின்சாரத்தை ஒழிக்கவும், மின் நிலையங்களை தனியார்மயமாக்க மின்சார மசோதாவையும் கொண்டு வந்துள்ளனர். இப்படி ஏராளமான சட்டங்களை திருத்தி உள்ளனர். அவற்றை திரும்பப்பெற வேண்டும் என்பதே எங்கள் போராட்டத்தின் கோரிக்கை. விவசாயிகளையும், பால் உற்பத்தியாளர்களை அழிக்கும் வகையில் அமெரிக்காவுடனும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடை யற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செய்துள்ளனர். இந்தியாவை ஒன்றிய அரசு விற்றுவிட்டது. நாட்டின் இறையாண்மை, தற்சார்பு அனைத்தும் அழியப் போகிறது. இந்திய சுதந்திரமும், அரசியலமைப்புச் சட்டமும் ஆபத்தில் உள்ளது. இதையெல் லாம் எதிர்த்துதான் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது” என்றார். பல்லாவரம் பல்லாவரம் அஞ்சலகம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு தலைமை யேற்று சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர். கருமலை யான் பேசுகையில், “சுரங்கத் தொழிலாளர்கள் அதிகாலை யிலேயே வேலை நிறுத்தத்தை தொடங்கி விட்டனர். நாடு முழு வதும் அனைத்து வகையான தொழில்களிலும் வெற்றிகரமாக வேலைநிறுத்தம் நடைபெற்றுள் ளது” என்றார். தென்சென்னை மாவட்டத் தலைவர் ஏ. முரு கானந்தம், பொருளாளர் ஏ. நட ராஜன் மற்றும் எம். சந்திரன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அண்ணாசாலை சென்னை அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே நடைபெற்ற மறியலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், சிஐடியு மாநிலத் தலைவர் ஜி.சுகுமாறன், தொமுச தலைவர் கீ. நடராஜன், ஏஐடியுசி பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் பி. சுகந்தி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தொமுச தலைவர் கி. நட ராஜன், “மக்கள் விரோத, தொழி லாளர் விரோத சட்டங்களையும், சட்டத் திருத்தங்களையும், திட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெறும் வரை தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட போராட்டம் தொடரும்” என்றார். திருவொற்றியூர் வடசென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் தலைமையில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அ. ராதிகா, சிஐடியு மாவட்டச் செய லாளர் வி.குப்புசாமி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர். மணிமேகலை, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எல். சுந்தரராஜன், பொதுத்தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கே.ஆர். முத்துசாமி, சடையாண்டி (ஏஐயுடியுசி), நாராயணமூர்த்தி (யுடியுசி), ஜான் அலெக்சாண்டர், எழில் வளவன் (விசிக), மாமன்ற உறுப்பினர் ஆர். ஜெயராமன், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சிட்டிபாபு, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். பாக்கியலட்சுமி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் விஜய், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் க. அகல்யா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எம்.ராஜ்குமார், சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் டி. வெங்கட் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
