ஓடும் ரயிலில் தீவிபத்து நூலிழையில் தப்பிய “ஸ்வர்ன் எக்ஸ்பிரஸ்”
தில்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நோக்கி “ஸ்வர்ன் நகரி எக்ஸ்பிரஸ்” ரயில் சென்று கொண்டு இருந்தது. ஞாயிறன்று காலை 9 மணியளவில், ஜேத்தா சந்தன் அருகே ரயிலின் ஒரு பெட்டியின் அடியில் இருந்து திடீரென புகை மற்றும் நெருப்பு வந்ததைக் கண்ட பயணிகள் உடனடியாக ரயில்வே ஊழி யர்களுக்குத் தகவல் அளித்தனர். ஆபத்தை உணர்ந்த லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) உடனடியாக ரயிலை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினார். ரயில்வே ஊழியர்கள் தீயணைப்புக் கருவிகளைக் கொண்டு தீயை விரை வாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் அல்லது காயமும் ஏற்பட வில்லை. தீ அணைக்கப்பட்ட பிறகு, ரயில் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. லோகோ பைலட்டின் துரித நடவடிக்கையால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என் பது குறிப்பிடத்தக்கது.