tamilnadu

img

ஜம்மு - காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றார்!

ஸ்ரீநகர், அக். 16 -  தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் முதல்வராக பதவி யேற்றுக் கொண்டார். ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (SKICC)  புதனன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சி யில், ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, உமர்  அப்துல்லாவுக்கு பதவிப் பிரமாண மும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். மேலும், உமர் அப்துல்லாவுடன் சதீஷ் சர்மா, சகினா யாத்தூ, ஜாவித் தார், சுரேந்தர் குமார் சவுத்ரி மற்றும் ஜாவித் ராணா ஆகிய 5 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில், ஜம்மு பிராந்தி யத்தைச் சேர்ந்த முக்கிய முகமான சுரேந்தர் குமார் சவுத்ரி, ஜம்மு - காஷ்மீரின் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டுள்ளார். இவர், ஜம்முவின் நௌஷேரா தொகுதியில் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னாவை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பதவியேற்பு விழா வில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலை வர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், சிபிஐ தேசிய பொதுச்செயலாளர் து. ராஜா, திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ், தேசிய வாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக் கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

“மாநில அந்தஸ்தை மீட்டெடுப்போம்”

பதவியேற்புக்குப் பின்னர், ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “ஆறாண்டு காலம் முழுவதுமாக பதவி வகித்த, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் கடைசி முதலமைச்சராக நான் இருந்தேன். இப்போது ஜம்மு - காஷ்மீர் யூனியன்  பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக நான் இருக்கிறேன். யூனியன் பிரதேசத்தின் முதல்வராக இருப்பது முற்றிலும் வேறு விஷயம். இது இயல்பிலேயே சவாலானது. எனினும், முன்னர் பணியாற்றியதைப் போலவே மகிழ்ச்சியாக பணியாற்றுவேன். இந்த யூனியன் பிரதேசத்தின் அந்தஸ்து தற்கா லிக மானதுதான் என்று நம்புகிறேன். மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற் காக, இந்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதை, நாங்கள் எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான சிறந்த வழி ஜம்மு - காஷ்மீ ருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதன் மூலம் துவங்கும்” என குறிப்பிட்டார்.