tamilnadu

img

செங்காரின் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் அதிரடித் தடை!

செங்காரின் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் அதிரடித் தடை!

புதுதில்லி, டிச. 29 - உ.பி. மாநிலம் உன்னாவ் மாவட்டத் தில், 17 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக் கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த துடன், அவரை ஜாமீனில் விடுதலை செய்ய தில்லி உயர்நீதிமன்றம் உத்த ரவு பிறப்பித்திருந்தது.  இந்த உத்தரவுக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அதிரடித் தடைவிதித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், உன் னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17  வயது சிறுமி. இவரை கடந்த 2017 ஆம் ஆண்டு, அன்றைய பாஜக எம் எல்ஏ-வான குல்தீப் சிங் செங்கார் கடத் திச் சென்று பாலியல் வன்கொடுமை க்கு உள்ளாக்கினார். சிறுமியின் தந்தை யையும் அவர் படுகொலை செய்ததும் நிரூபணமானது. இந்த வழக்கில் முன் னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கா ருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில், 2019 டிசம்பரில்  வழங்கப்பட்ட விசாரணை நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செங்கார் மேல்முறை யீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், போக்சோ சட்டத்தின் கீழ் ‘அரசு ஊழியர்’ என்ற வரையறை யில் தெளிவின்மை இருப்பதாகவும், ஒரு சட்டமன்ற உறுப்பினர் அரசு ஊழி யராகக் கருதப்பட மாட்டார் என்றும் கூறி யது. மேலும், 2017 உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்ட னை அனுபவித்து வந்த செங்காரின் ஆயுள் தண்டனையை டிசம்பர் 23 அன்று தில்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேலும் செங்கார் ஏற் கெனவே 7 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் சிறையில் கழித்துவிட்ட தாகக் கூறி அவருக்கு ஜாமீன் வழங்கி யும் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பிலும், சிபிஐ தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, அகஸ்டின் ஜார்ஜ்  ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு திங்களன்று விசார ணைக்கு வந்தது.  விசாரணையின் முடிவில் உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், ‘குற்றவாளி ஒரு தனி குற்ற த்துக்காக தண்டிக்கப்பட்டிருக்கும் இந்த அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 23 தேதியிட்ட தில்லி உயர்நீதிமன்றத் தின் உத்தரவுக்கு நாங்கள் தடை விதிக்கிறோம். எனவே, அந்த உத்தர வின்படி செங்கார் விடுவிக்கப்பட மாட்டார்’ என்று கூறினார். “பொதுவாக இடைநிறுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட பிறகு அவற்றில் தலையிடப்படுவதில்லை என்றாலும், குற்றவாளி மற்றொரு வழக்கில் சிறையில் இருப்பதால், இது அசாதாரணமான சூழ்நிலையாக இருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் தண்டனை இடைநிறுத்த உத்தரவில் கணிசமான சட்டக் கேள்விகள் எழுகின்றன. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு  376(2)(i)-இன் கீழ் உள்ள தண்டனை யை உயர் நீதிமன்றம் ஆராய்ந்ததா என்பது குறித்து கடுமையான கவலை எழுகிறது. போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு காவலரை பொது ஊழியராக கருதும் விளக்கம் இருக்கும் நிலையில், ஒரு  சட்டப்பேரவை உறுப்பினர் அதி லிருந்து விலக்கப்பட்டிருக்கிறார். போக்சோ சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் தண்டனை அதிகரிப்பு தொடர்பானவையே தவிர, புதிய குற்றத்தை உருவாக்குவது அல்ல!” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், குல்தீப் சிங் செங்காருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.