tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா

மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்குக் கீழ்ப்படிந்தவை அல்ல. ஆட்சியில் எந்த அரசியல் கட்சி இருந்தாலும், மாநில அரசுகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். ஒரு மாநிலத்தின் குடிமக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் என்று வரும்போது, மாநிலங்களுக்கு இடையே ஒருதலைப்பட்சமான அணுகுமுறையைக் கையாள முடியாது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா

பாஜகவினர் முன்பு பசுக்களையும் எருமைகளை யும் திருடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது அசாமில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பசு, எருமை வழங்குவதாக அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினர் வாக்குறுதி அளிக்கின்றனர். திருடுபவர்கள் எப்படி கொடுப்பார்கள்?  பாஜகவினர் முற்றிலும் ஏமாற்றுக்காரர்கள்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

பாஜக எப்போதெல்லாம் மக்களிடம் தோல்வியடைகிறதோ, அப்போதெல்லாம் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து சதி செய்கிறது. தற்போது எஸ்ஐஆர் செயலில் உள்ளது. இது வாக்காளர் திருத்தம் அல்ல. தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) ஆகும். அதன் நோக்கம் வாக்குகளைச் சேர்ப்பதை விட, வாக்குகளை நீக்குவதே ஆகும்.

சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்தர்

இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கூறி வருகிறது. ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அனைத்து பிரச்சாரகர்களும் மற்றும் மோகன் பாகவத்தும் முதலில் திருமணம் செய்து கொண்டு, இந்துக்களின் மக்கள் தொகையை அதிகரிக்கட்டும்.