tamilnadu

img

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு சேர்க்கை நிறுத்தம் மதுரையில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு சேர்க்கை நிறுத்தம் மதுரையில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்

மதுரை, ஜூலை 8- இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஇ) 25  சதவீத இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு நிதி வழங்காததை காரணம் காட்டி நடப்பு ஆண்டில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கை நடை பெறவில்லை. இதனை கண்டும் காணாமல் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு துணை போவதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் மதுரை தல்லாகுளம் அருகில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை மதுரை மாநகர், புறநகர் சார்பில் முற்றுகை போராட்டம் செவ்வாயன்று  நடைபெற்றது. மதுரை மாநகர் மாவட்ட தலைவர் ஜெ.டீலன் ஜெஸ்டின் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் கா.பிருந்தா கண்டன உரையாற்றினார். மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் சி.டேவிட் ராஜதுரை துவக்கிவைத்து பேசினார். புறநகர் மாவட்டச் செயலாளர் சுதர்சனன், புறநகர் மாவட்டத் தலைவர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து பேரணி யாக வந்த மாணவர் சங்கத்தினர், மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பினர். அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்திய நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.