tamilnadu

img

குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

தஞ்சாவூர், டிச.26 –  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் வியாழக்கிழமை யன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய கட்டடங்களை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்தார். அதன்பின்னர் அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களி டம் கூறியதாவது:   தமிழகத்தில் உள்ள எல்லா பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில், பாதுகாப்பு நட வடிக்கைக்காகவும் மாணவிகளின் நலன் குறித்தும்  குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட மாணவி, பல்கலைக் கழகத்தில் உள்ள குழுவில் இரண்டு நாட்களுக்கு முன்பாக தெரிவித்து இருந்தால், துரிதமாக நடவடிக்கை எடுக்க வசதியாக இருந்திருக்கும். அண்ணா பல்கலைக்கழக பதி வாளர் விளக்கமும், மேற்கொண்டு ஒரு மாணவி பாதிக்கப்பட்டிருக் கிறார் என்பதை மனதில் வைத்தும், அரசியல் செய்ய முற்பட்ட, பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு தரும் விளக்கம் என்னவென்றால், கடந்த காலங்களில் பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்திற்கு அப்போது இருந்த மாநில அரசே துணை நின்ற சம்பவம் உண்டு. பொள்ளாச்சி கும்பல் பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நமது முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது,  கூறிய போதெல்லாம் நிராகரித்துவிட்ட னர். ஆனால், அண்ணா பல்கலைக் கழக மாணவி, காவல்நிலையத்தில் புகார் அளித்த மூன்று மணி நேரத்தில், குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், இந்த அரசை பாராட்ட மனமில்லாமல், குறை சொல்பவர்களின் மனநிலை தான் குறையாக உள்ளதே தவிர,  அரசு, பல்கலைக்கழகம் மற்றும் காவல்துறையினர் செயல்பாடு சிறப் பாகத் தான் உள்ளது.  ஆனாலும், இன்னும் கவனமாக இருந்து மாண விகள், மாணவர்கள் நலனுக்காக இந்த அரசு உறுதுணையாக இருக்கும். குற்றவாளி மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும். கைது செய்யப்பட்டவர் திமுக பிரமுகர் என கூறுவது தவறான செய்தி. எது நடந்தாலும் குறை சொல்ல வேண்டும் என்பது அண்ணாமலையின் பிறவிக் குணம். மூன்று மாதம் அமைதியாக இருந்த தமிழகத்தில், மீண்டும் தனது குணத்தை அண்ணாமலை காட்டி வருகிறார். திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்பது இருந்தாலும், தனி மனித அத்துமீறல், வெறுப்பு விருப்புகள் அதிகரித்துவிட்டன. இருப்பினும், அதையும் கண்காணித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை பாராட்ட வேண்டுமே தவிர, குறை களை சொல்லி பேசுவது பயனில்லை. இவ்வாறு அவர் கூறினார்.