இலங்கை ஜனாதிபதி அலுவலக சொகுசுக் கார்கள் ஏலம்!
இலங்கையின் இடதுசாரி ஜனாதிபதி யான அனுர குமார திஸாநாயக்க, தாம் பொறுப்பேற்றது முதலே பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அரசாங்கத்தின் செல வுகளை குறைப்பது என முடிவெடுத்துள்ள அவரது அரசாங்கம், அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அவர்களு டன் செல்லும் அதிகாரிகளின் வாகனங்கள் எண்ணிக்கையை குறைக்கவும் முடிவு செய்தது. இதனடிப்படையில், ஜனாதிபதி அலுவலகத்தில் தேவைக்கு அதிகமாக இருந்த 14 சொகுசு கார்கள் மற்றும் ஜனாதிபதி வாகனத்தின் அணிவகுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட வாகனங்கள் என 15 வாகனங்களை பிப்ரவரி 28 அன்று ஏலம் விட்டுள்ளது. இந்த வாகனங்கள், தொடர் பயன்பாட்டில் ஈடுபடுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் என்பதும், முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் பணிக்குழுவினால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.