tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி பேசுகையில்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி பேசுகையில்:  “1200-க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட வேள்பாரி நாவல் வாழ்க்கையின், மனிதர்களின் பல்வேறு அம்சங்களைப் பேசுகிறது. டால்ஸ்டாய் எழுதிய ‘போரும் அமைதியும்’ நாவலை நினைவுபடுத்துகிறது. போருக்குத் தொடர்பில்லாத முக்கிய இலக்கியப் படைப்புகளை ஆராய்ந்து பார்த்தேன். மகாபாரதமும் ராமாயணமும் போருக்குத் தொடர்புடையதாக உள்ளன.   வேள்பாரி நாவல் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. மொழிபெயர்ப்பு முடிக்கப்பட்டவுடன் வேள்பாரியை வழங்க டிசி புக்ஸ் பதிப்பகத்திடம் கேட்டுள்ளேன். ‘முல்லைக் கொடி’ என்பது ‘முல்ல வல்லி’ என மலையாளத்தில் வழங்கப்படுகிறது. படர்ந்து வளர முடியாமல் தவித்த முல்லைக் கொடிக்கு வேள்பாரி தனது தேரையே தந்தவன். வைக்கம் முகமது பஷீருடன் ஒப்பீடு  இதுபோன்ற படைப்புகளை வாசிக்கும்போது வைக்கம் முகமது பஷீரின் மிகச் சிறந்த நாவல்களை நினைவுபடுத்தாமல் இருக்க முடியாது. வைக்கம் முகமது பஷீரின் மலையாளப் படைப்புகளை ஐரோப்பிய பண்டிதர் ஆஷ்ரப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். பல்வேறு மொழிகளிலும் அவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  வைக்கம் முகமது பஷீரின் படைப்புகளில் உள்ள அம்சங்களில் ஒன்றான பண்பாட்டு வளர்ச்சி குறித்த உரையாடல் போலவே சு. வெங்கடேசன் எழுதியுள்ள வேள்பாரியிலும் இடம்பெற்றுள்ளது.   மானுடத்தின் மேன்மை  வைக்கம் முகமது பஷீரின் படைப்புகளில் அறம், நல்ல செயல்கள் குறித்த கேள்விகள் இடம்பெற்றுள்ளன. பாதையோரம் நீரின்றித் தவிக்கும் செடிக்கு நீரை ஊற்றிக் காப்பாற்றுவது போல் பிறருக்கு நல்ல செயல்களைச் செய்ய முடியும் என்கிறார் முகமது பஷீர். இதுபோலவே மனிதத்தன்மையின் மேன்மை வேள்பாரியில் இடம்பெற்றுள்ளது.  மலையாளத்தில் வேள்பாரி வெளியாகும்போது நிச்சயம் ‘வைக்கம் முகமது பஷீரும் சு. வெங்கடேசனும்’ என்ற தலைப்பில் மதிப்புரை எழுதத் திட்டமிட்டுள்ளேன்.  நோபல் பரிசு வாய்ப்பு  சு. வெங்கடேசனின் படைப்புகள் பல்வேறு மொழிகளில், குறிப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலக வாசகர்க ளை எட்டினால், ரவீந்திர தாகூருக்குக் கிடைத்த நோபல் பரிசு சு.வெங்கடேசனுக்கு அளிப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.”