மதுரை:
ஆதித்தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் கு.ஜக்கையன் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:பஞ்சமி நில மீட்புக்காக தொடர்ந்து களமாடி வரும்சமூக நீதிகட்சியின் தலைவர் பன்னீர் செல்வம் மற்றும்பொதுச் செயலாளர் நாகராஜன் ஆகியோரை கோவை மாவட்ட காவல்துறை வியாழன் அதிகாலை சட்ட விரோதமாக கைது செய்துள்ளது. சமூக நீதிக் கட்சியானது நீண்ட காலமாக பஞ்சமிநிலங்களை ஆக்கிரமிப்பாளர்களி டமிருந்து மீட்டுத்தரவேண்டுமென மனுக்கள்கொடுத்தும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் ஆளுகின்ற அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தது. அரசின் மெத்தனப் போக்கால் நேரடியாக களத்தில் இறங்கி மீட்பது என நேரடி நடவடிக்கையில் கடந்த வாரம் இறங்கினர். இந்நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் பன்னீர்செல்வம் மற்றும் நாகராஜ் ஆகியோர் மீது, அத்துமீறி தங்களது நிலத்தில்நுழைந்ததாக புகார் அளித்தனர். அதற்காக காவல்துறை தற்போது நடவடிக்கை எடுத்து தோழர்களை கைது செய்துள்ளது. ஆக்கிரமிப்பை மீட்கக்கோரி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத கோவை மாவட்ட காவல்துறை தற்போது போராளிகளைக் கைது செய்துள்ளது. ஆதித்தமிழர் கட்சி இந்த சட்ட விரோத கைதினைவன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.