tamilnadu

img

மதுரையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - SFI போராட்டம்!

மதுரை,மார்ச்.27- மதுரையில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகம், காவல்துறையைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை ஸ்ரீவாணி வித்யாலையா பள்ளியில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காமல் மாணவியைக் காவல் நிலையத்தில் வைத்து 6 மணி நேரம் பஞ்சாயத்து பேசியதோடு, குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தையும், மதுரை காவல் துறையையும் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் கோ.அரவிந்த சாமி தலைமையில் பள்ளி முன்பு  போராட்டம் நடத்தினர்.
மேலும் போராட்டம் நடத்திய மாணவர்களைப் பேசக் கூட விடாமல் காவல் துறையினர் அராஜக முறையில் கைது செய்துள்ளனர்.