கிராம மக்களின் விருப்பமான இடத்தில் சமுதாயக் கூடம் அமைத்திடுக! திருவில்லிபுத்தூரில் சிபிஎம் காத்திருப்புப் போராட்டம்
திருவில்லிபுத்தூர், நவ.26– திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட பி.ராமச்சந்திராபுரம் ஊராட்சியின் பழைய செந்நெல்குளம் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர்கள். இக்கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்கான இடத் தேர்வில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. கிராம மக் கள், அரசு புறம்போக்கு நத்தம் புல எண் 188/2–ல் உள்ள 843 ச.மீ. பரப்ப ளவு கொண்ட காலியிடமே சமுதா யக்கூடத்துக்கு ஏற்ற இடம் என்று தேர்வு செய்து தெரிவித்துள்ளனர். ஆனால், மக்களின் விருப்பத்திற்கு மாறாக, கோவில் திருவிழா மற்றும் ஊர் விழாக் கள் நடைபெறும் நத்தம் புல எண் 162/2 இடமே ஊராட்சி நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டு அங்கு கட்டு மானப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் பலமுறை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரி களுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், 26.9.2025 அன்று இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட் டம் அறிவிக்கப்பட்டது. போராட்டத்திற்குச் செல்லும் வழியில் வன்னியம் பட்டி விலக்கு காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களை தடுத்து, கைது செய்ய முயற்சித்தனர். அப்போது சார்பு ஆய்வாளர் பாலமுருகன் பெண்கள் மீது அராஜகமாக நடந்துகொண்டார் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில், கிராம மக்கள் விருப் பப்படி புல எண் 188/2–ல் சமுதா யக்கூடம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு செய்யப் பட்டது. மேலும், வட்டார வளர்ச்சி அலு வலர் ஒரு மாதத்திற்குள் மாவட்ட நிர்வா கத்துடன் ஆலோசித்து பணிகளை முன்னெடுக்க உறுதி அளித்தார். இது குறித்து வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரின் எழுத்துப்பூர்வக் கடிதமும் சிபிஎம் தலைவர்களிடம் வழங்கப்பட்டது. ஆனால், இரண்டு மாதங்கள் கடந்தும் எந்த உத்தரவும் வழங்கப்படா ததால், மீண்டும் இதே கோரிக்கையை வலியுறுத்தி சிபிஎம் தலைமையில் கிராம மக்கள் புதன்கிழமை திரு வில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் காத்திருப்பு போராட் டத்தை தொடங்கினர். போராட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் சசிகுமார், ஊர் நிர்வாகி கள் ராமராஜ், ரவி, வேலாயுதம், காட்டு ராஜா உள்ளிட்டோர் தலைமை யேற்றனர். ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பொது மக்களின் நியாயமான கோரிக்கையை செவிமடுக்காமல் காலம் தாழ்த்தி வரு வதை கண்டித்து மத்திய குழு உறுப்பின ரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான கே.பாலபாரதி, மாநில செயற் குழு உறுப்பினர் கே.அர்ஜுனன் உள்ளிட்டோர் பேசினர். மதியம் வரை நிர்வாகத்திலிருந்து பதில் வராததால், போராட்டக்காரர்கள் அலுவலக வளாகத்திலேயே சமை யல் செய்து உணவு உண்டபடி போராட் டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்ற னர். போராட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குருசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் திரு மலை, ஜோதிலட்சுமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சந்தனம், பெருமாள் மற்றும் பெரும்பாலான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
