“உங்க கிட்ட ஓட்டு இருக்கு.. என் கிட்ட நிதி இருக்கு..”. இப்படித்தான் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். தங்கள் கட்சிக்கும் அணிக்கும் வாக்குகளை செலுத்தவில்லை என்றால் நிதி ஒதுக்க மாட்டோம் என்று மேடை யில் வெளிப்படையாக மக்களை மிரட்டி வருகிறார். என்ன இப்படி மிரட்டிக் கொண்டி ருக்கிறாரே என்று முதல்வர் பட்னாவிசிடம் நிருபர்கள் கேட்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இப்படியெல்லாம் பேசுவது வாடிக்கைதான் என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார். ஏற்கெனவே, எதிர்க்கட்சி வேட்பாளர் களின் வேட்புமனுக்களை நிராகரித்து, பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வானதாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வெற்றிக்காக பல ஃபார்முலாக்களை பாஜக அவிழ்த்து விடுகிறது. இவையெல்லாம் மக்கள் தீர்ப்பை நிராகரித்துக் குறுக்கு வழியில் வெற்றி பெறுபவையாகவே உள்ளன. தொடர்ந்து தோல்வியுற்று வருவதால் சண்டிகர் நிர்வாகத்தைத் தன் வசம் எடுத்துக் கொள்ள ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் சட்டம் தயாராகியது. மேயர் தேர்தலில் கவுன்சிலர்களின் வாக்குகளை செல்லாத வாக்குகள் என்று அறிவித்து, வெற்றி பெற்றனர். அப்பட்டமான இந்த ஜன நாயக விரோதச் செயலை உச்சநீதிமன்றம் கண்டித்து, தேர்தலை ரத்து செய்தது. பின்னர், கவுன்சிலர்களை விலைக்கு வாங்கினர். மக்களவைத் தேர்தலில் தோற்றனர். இதனால், சண்டிகர் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தனிச்சட்டம் இயற்ற பாஜக முடிவு செய்தது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பஞ்சாப் மாநில பாஜகவே “இது வேண்டாமே” என்று கெஞ்சுமளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. பல தரப்பு எதிர்ப்புகளால் ஒன்றிய பாஜக அரசும் இப்போதைக்கு தள்ளி வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறது. 272 மிக முக்கியமான நபர்கள் ராகுல் காந்திக்கு எதிராக ஒரு கடிதத்தை அண்மையில் வெளியிட்டனர். வாக்குத் திருட்டு விவகாரத்தில் ராகுல் காந்தியின் அணுகுமுறையை அதில் கண்டித்திருந்தனர். இந்தக் கடிதத்தில் கையொப்பம் இட்டவர்களில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கேசவ் தேசிராஜூவும் ஒருவராவார். அவர் 2021 ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார். இறந்துவிட்ட ஒருவரிடம் நான்காண்டுகள் கழித்து கையொப்பம் பெற்றதை பாஜகவின் சாதனைகள் பட்டியலில் சேர்க்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கிண்டலடிக்கின்றன. மேலும் அந்த 272 பேரில், பல பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அந்த வழக்குகள் உயிர் பெறாமல் இருக்கவே, ஏதாவது கேட்டால் “நீங்களே கையெழுத்துப் போட்டுக் கொள்ளுங்கள்” என்று சொல்லும் அளவுக்கு அதில் பல பேர் இருக்கிறார்களாம். பொது சுகாதார நலனில் பெரும் சாதனையை கேரளா நிகழ்த்தப் போகிறது. “கேத் லேப்”( Cath Lab) என்பது இதய நோய்களைக் கண்டறிவதற்கும், ஊடுருவி மேற்கொள்ளும் சிகிச்சைகளில் குறைந்தபட்ச ஊடுருவலைச் செய்யவும் உதவும் இதய வடிகுழாய் ஆய்வகமாகும். 2023 ஆம் ஆண்டில் காசர்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டது. பின்னர் வயநாடு, அதன் பின்னர் ஒவ்வொரு மாவட்டமாக இந்தப் பணி நிறைவேறியது. தற்போது இடுக்கி மருத்துவக் கல்லூரியில் ஆய்வகம் அமைக்க 10.3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம் அமையும்போது, இந்தியாவிலேயே அனைத்து மாவட்டங்களிலும் கேத் லேப் இருக்கும் ஒரே மாநிலம் கேரளா என்ற பெருமையைப் பெறும். மாநிலத்தில் அதிக மான இதயப் பரிசோதனை கள் நடக்கும் இடங் களாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள் மாறியுள்ளன.
