தொழிலாளர் - விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெறுக! தமிழ்நாடு முழுவதும் ஆவேசப் போராட்டம்
நவம்பர் 26 அரசியலமைப்புச் சட்ட தினம், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை முழங்கும் போராட்ட தினமாக மாறி வருகிறது. விவசாயிகள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மோடி அரசுக்கு எதிராக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாகவும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பாகவும் ஆவேசமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
